பழைய கற்காலம் : Paleolithic Age in Tamil

பழைய கற்கால மனிதன் இருப்பிடம்

 கற்காலம் தமிழ்நாட்டில் தோன்றியதற்கான உண்மையான ஆதாரங்களுடன் உலகறிய செய்தவர் மண்ணியர் மனித இயல் மேதை ராபர்ட் ப்ரூஸ் புட் ஆவார்.  அவரது பல்லாவரம் அத்திரம்பாக்கம் கண்டுபிடிப்புகளும்ச  மதுரை,  திருச்சி,  தூத்துக்குடி,  வல்லம் போன்ற இடங்களில்  அகழ்ந்தெடுக்கப்பட்ட கருவி ஆதாரங்களும் இதை உறுதிப்படுத்தின.  தமிழ்நாட்டில் பழைய கற்காலம் கி-மு 35,000 முதல்  கி-மு 10000 வரை நீடித்திருக்கலாம்.

பழைய மனிதன் இந்தியாவில் முதன்முதலில் எங்கு  தங்கியிருந்தான்? 

குளிர் மிகுந்த இமயமலை போன்ற மலைகள் மீது அவன்  தங்கியிருத்தல் இயலாது;  கொடிய விலங்குகளும் இருளும்  விடப் பூச்சிகளும்  நிறைந்த கால்களிலும் இவன் தங்கியிருத்தல் இயலாது.  பண்டைக்காலத்தில் கங்கை போன்ற பெரிய ஆற்றுப் அல்ல பள்ளத்தாக்குகள் சதுப்பு நிலங்களாக இருந்தன.  இவற்றை நோக்க,  பண்டை மனிதன் மலையை  அடுத்த காடுகளுக்கும்,  கடலுக்கும் இடைப்பட்ட தக்காண பகுதியிலும் தென்னிந்திய பகுதிகளுமே வாழ்ந்தார் என்பது பொருத்தமாகும்.  மனித குரங்குகள் என்று சொல்லப்படும் கொரிலா,  சிம்பான்சி,  கிப்பன்,  உராங்குட்டான் என்பவற்றின் மிகப்பழைய எலும்புக்கூடுகள் தென்னிந்தியாவில் கிடைத்தமையும் இவ்யுகத்தை உறுதிப்படுத்துவதாகும்.  இங்கு நிலம் கடல் மட்டத்தைவிட ஓரளவு உயர்ந்துள்ளது.  பண்டைய மனிதனை தாக்கக்கூடிய மிகக் கொடிய விலங்குகள்  மிக பலமாக இருந்திருக்கக் கூடிய முறையில் அடர்ந்த காடுகள் இருந்தன என்று கூற சான்றுகள் இல்லை.  பழைய மனிதன் புதர்களிலும் மரக்கிளைகளிலும் தங்க வசதி இருந்தது.  இன்று போலவே இப்பகுதிகளில் தட்பவெப்ப நிலை பண்டைய மனிதன் கொடுக்கக் கூடியதாக இருந்தது.  அவன் உடை இன்றி வாழ இவ்விடமே இன்றுபோல் அன்றும் ஏற்றதாக இருந்தது.  அவன் இருந்த சமவெளிப் பகுதி அவனுக்குத் தேவையான நீரை வழங்கி வந்தது.  நீரை எடுத்து வைத்தும் பாத்திரங்களை கண்டறியாத அவன் ஆறுகளுக்கு அண்மையிலேயே வாழ்ந்து வந்தான்.

கற்கால நாகரிகம் தமிழகத்தில் தொடர்ந்து  வளர்ச்சி பெற்று வந்திருப்பதை இராமச்சந்திர தீட்சதர் ஏற்றுக்கொண்டதோடு,  தென்னிந்திய கற்கால நாகரீகத்தை  உருவாக்கியவர்களும் தமிழ் மக்களே என்கிறார்.  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய தென்னிந்திய மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவனது காலத்தை கணித்துள்ளனர்.  

தமிழ்நாட்டில் பழங்கற்கால மனிதர் வாழ்ந்த நிலையை அறிந்துகொள்ள அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை சான்றுகளாக உள்ளன.  சென்னை மாநகரை சுற்றியுள்ள பகுதியில் பண்டைய மனிதர் கையாண்ட  கைக்கோடரிகளும்,  கத்தி போன்ற  பிளப்பான்களும்  கண்டெடுக்கப்பட்டன.  இக்கருவிகளைச்  செய்த திறனை 'சென்னை தொழில்முறை' (Madras Industry) என்பர்.   ஐயப்பாட்டினைத்  தரக்கூடிய தலையோடுகளையும்,  எலும்புகளைக்  காட்டிலும் கற்கருவிகளே  மானிடவியல் அறிஞர்கட்கும் (Anthropologists),  உயிர் நூல் அறிஞர்கட்கும்  (Biologist)  ஆய்வு முடிவுகள் உறுதுணையாக உள்ளன.  தக்காண பீடபூமியின் தென்கோடியில் தான் மனிதன் முதன்முதலில் அவதரித்தாள் என பி டி சீனிவாச ஐயங்காரும் பிற சில அறிஞர்களும் கருதுகின்றனர்.

சென்னை தொழில் முறையில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் பல வட இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கைக் கோடரி தொழில்முறைக்  கருவிகளை ஒத்துள்ளது.  வடமேற்குப் பகுதியில் இதையே "சோஹன் தொழில் முறை" (Sohan Industry) என்பர்.  செங்கல்பட்டு, வடஆற்காடு பகுதிகளில் காணப்பட்ட பல கற்கருவிகள் படிகக்கல்லால் (quartx)   ஆனவை.  இதனால் தமிழகத்தின் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதனை  படிகக்கல்லால் மனிதன் என்றும் அழைப்பர்.

 பண்டைய  மனிதனின் எலும்புக்கூடுகளில் கிடைத்த பற்களைக் கொண்டும்,  அவன் பயன்படுத்திய  கற்கருவிகளுள் விலங்குகளைக்    கிழிக்கத்தக்க கருவிகள் காணப்படாமை கொண்டும்,  பழைய கற்கால முற்பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இறைச்சி    தின்னாதவனாக இருந்தான்  என்பது தெரிகிறது.  அவன் வாழ்ந்த பகுதிகளில் பழங்களும் கிழங்குகளும் மிகுந்து காணப்பட்டன.  அவையே அவனுக்கு நெடுங்காலம் உணவுப்பொருளாக இருந்தன.

பழைய கற்கால கருவிகள்

பழைய கற்காலம் என்பது பதப்படுத்தப்படாத கற்கருவிகளைப் பழைய மனிதன் பயன்படுத்திய காலம் ஆகும்.  பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

அக்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள் கர்நூல்,  குண்டூர்,  நெல்லூர்,  கடப்பை,  செங்கல்பட்டு,  வடஆற்காடு ஆகிய மாவட்டங்களில் கிடைத்துள்ளன.  பலவகைக்  கோடாரிகள்,  ஈட்டிகள்,  குழிதோண்டும் கருவிகள்,   வட்ட கற்கள்,  இருபுறமும் கூர்மை அமைந்த நீண்டு ஒடுங்கிய கத்திகள்,  சித்திகள்,  ஒரு பக்கம் மட்டும் கூர்மை பொருந்திய முட்டை வடிவில் அமைந்த கருவிகள்,  நிலத்திலிருந்து கிழங்கு முதலிய வற்றை பெயர்த்து எடுக்கும் கருவிகள் முதலிய கற்கருவிகள் மிகப்  பலவாகக்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இக்கருவிகள் செய்யத்தக்க கற்கள் சத்தியவேடு மலைகள்,  ஸ்ரீபெருமாத்தூர்  மலைகள்,  நல்லமலை,  மலைகளிலும்,  கடப்பை,  கர்நூல் மாவட்டங்களிலுள்ள  மலைகளிலும் கிடைக்கின்றன.

 வேட்டையாடுதல் பண்டைய மனிதன் பழங்களையும் கிழங்குகளையும் இன்று வந்தான் என்று கூறினோம் அல்லவா?  கிடைக்கத் தவறிய காலங்களில் அவன் விலங்குகளைக்   கொன்று உண்ணத் தொடங்கினான்.  விலங்குகளின் இறைச்சி முதலில் பச்சையாகவே உன்ன பட்டது.  தொடக்கத்தில் அவன் தவளை போன்ற சிறிய பிராணிகளையே  உண்டிருத்தல் வேண்டும்.   கொன்ற விலங்குகளின் இறைச்சியை  கிழிக்க  கற்கருவி கண்டறிந்த பின்பே,  பண்டைய மனிதன் முயல்,  மான்,  ஆடு,  மாடு போன்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணத்  தொடங்கி இருத்தல் வேண்டும்.  அவன்  பழங்களையும் கொட்டைகளையும் தனக்கு முக்கிய உணவுப் பொருட்களாக கொண்டு,  இறைச்சியைத்  துணை உணவுப் பொருளாகக் கொண்டான்.  மனிதனுடைய பல் அமைப்பு இன்றளவும் இந்த உண்மையைத்தான் உரைக்கின்றது.

 கற்கோடாரி களும்,  ஈட்டிகளும்,  வட்டக் கற்களும் விலங்குகளை  வேட்டையாடவும் கொடிய விலங்குகளை கொள்ளவும்  பயன்பட்டிருத்தல் வேண்டும்.  பண்டைய மனிதன் தொடக்கத்தில் கொடிய விலங்குகளுடனும்,   பூச்சிகளுடனும் வாழவேண்டிய துன்ப நிலை இருந்தது.  அவன் அவற்றின் தாக்குதலிலிருந்து தன்னை காத்துக் கொள்ள  மேல் சொல்லப்பெற்ற கற்கருவிகளை பயன்படுத்தினான்;  ஆபத்து காலங்களில் மரக்கிளைகளின் மீது தங்கினான்.  இங்கனம் அமைந்த ஆபத்தான சூழ்நிலை அவனுக்கு படிப்படியாக  அஞ்சாமையை ஊட்டியது.  அவன் தன் அறிவைப்  பயன்படுத்தி,  மேற்கூறிய கற்கருவிகளைக்  கண்டறிந்தான்;  படிப்படியாக   வில்லையும்,  அம்பையும் பயன்படுத்தி,  விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடத் தொடங்கினான்.  அவன் மரபினரே  தென்னிந்திய காடுகளில் இன்றும் வாழ்ந்து வரும் வேடர்களாவர்.

திராவிடர்களின் முன்னோர்

கற்கால தமிழர் மூலமுதல் சிந்தனையாளர்கள்!  மனிதன் சிந்திக்கத் தெரிந்த மிருகம் என்ற கோட்பாட்டை  மெய்ப்பித்தவர்கள்.  மூளையைப் பயன்படுத்தி இயற்கை சீற்றத்திலிருந்து விலங்குகளின் தாக்குதலில் இருந்தும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான தற்காப்பு கலையைக் கண்டறிந்தனர்.  குகைகளைக் குடில்கள் ஆக்கிக்கொண்டு தங்கினர்.  கரடுமுரடான கற்களிலிருந்து கருவிகளையும்,  ஆயுதங்களையும் உருவாக்கினர்.  அதாவது இயற்கையின் புதல்வர்களான பழைய கற்கால மக்கள் இயற்கையின் நன்கொடைகளைத்  தங்களுக்குச் சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டனர்.  நெருப்பை கண்டுபிடித்தனர்.  வேட்டையாடி உணவுப் பொருட்களை சேகரித்தனர்.  சவால்களை எதிர் கொண்டனர்.  இவர்களை காட்டுமிராண்டிகள் (Barbarians)  என்று கூறுவது அவர்களது ஆற்றல்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.  பழைய கற்கால மக்களின் திராவிடர்களின் முன்னோர் என்று(Pre - Dravidians)  என்று கூறுகிறார் ஆர் சத்தியநாதய்யர்.

 நெருப்பு

மூங்கில்கள் பெருங்காற்றில் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பிடித்து எரிதல் ஓர் இயற்கை நிகழ்ச்சியாகும்.  இதனைக்  கண்ட பண்டைய மனிதன்,  இரண்டு  மரத்துண்டுகளை கொண்டு நெருப்பை உண்டாக்கலாம் என்பதை அறிந்தான்  பின்பு ஒரு மரக்கட்டையில் கூறிய கற்கருவிகளைக் கொண்டு சிறிய பயத்தை உண்டாக்கி,  அப்பளத்தில் ஒரு குச்சியை விட்டு கடைந்து தீயை உண்டாக்க அறிந்தான்.   சிக்கிமுக்கிக் கற்களை கொண்டு நெருப்பை உண்டாக்கும் முறை மூன்றாவதாகும்.  பழைய மனிதன் இம்மூன்று முறைகளையும் கையாண்டான்;  கட்டைகளை எதிர்த்து இரவில் வெளிச்சத்தை  உருவாக்கினான்.  தான் கொன்ற விலங்குகளின் இறைச்சியை நெருப்பில் பதப்படுத்தி உண்டான்;  பச்சை இறைச்சியைவிட பதப்படுத்தப்பட்ட இறைச்சி இறுதியில் உன்ன தக்கதாக இருந்தது அறிந்து மகிழ்ந்தான்.

 நாடோடி வாழ்க்கை

பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களில் கற்கருவிகள் காணப்படுகின்றனவே தவிர,  மட்பாண்டங்கள் காணப்படவில்லை.  எனவே அவர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர் என்று கூறுவதற்கில்லை.  உலகமெங்கும் இருந்த இம்மக்கள் நிலையாக எங்கும் வாழ்ந்ததில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள்  ஒப்புகின்றனர்.  முதலில் தனித்தனியே வாழ்ந்த மக்கள் விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும்,  இவ்வுணர்ச்சியால்  உந்தப்படும் ஒன்று சேர்ந்து வாழலாயினர்;  தங்களுக்கு தேவையான கருவிகள் செய்யத்தக்க பாறைகள் கிடைக்கத்தக்க இடங்களில்  தங்கி வாழலாயினர்.  கர்நூல் மாவட்டத்திலுள்ள  பில்லசுர்க்கம்  குகையில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமை கூறிய  அடையாளங்கள் காணப்படுகின்றன.  அங்கு மிகப் பழைய கால விலங்குகளின் எலும்புகளும்,  பற்களைக் கொண்டு செய்யப்பட்ட தாயித்தக்களும்,  கிடைக்கப்பெற்ற எறும்புகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.  பழைய கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் இன்றுள்ள வேடங்களை போலவும் மலைவாணர்களைப்  போலவும்  கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்று கூறலாம்.

 பண்டை  மக்கள் நாடோடிகளாக இருந்தமையால்,  இறந்தவரை விலங்குகளும் பறவைகளும் தின்னும்படி விட்டுவிட்டுச்  சென்றனராதல் வேண்டும்.  தற்காலத்தில் கிடைத்த முதல் மண்பாத்திரம்,  இறந்தவர் உடலை அடக்கம் செய்யும்  தாழியாகும்.   இதனை நோக்க,  பழைய கற்கால மக்கள் இறந்தவரை புதைக்கவில்லை என்பதை அறியலாம்.  இவ்வாறு இறந்த  உடம்புகளை  எறித்துவிடுதல்  விவேக்  திபேத்தியரிடமும் பார்ஸிகளிடத்தும் இன்றும் காணலாம்.

உடை

பண்டைய மனிதன் முதலில் ஆடையின்றிப்   இருந்தபடியே இருந்தான்.  அவன் வேட்டையாட அழிந்த பிறகு,  விலங்குகளின் தோள்களை  ஆடையாக கொண்டான்;  இலைக்  கொத்துகளை மாலைபோல்  கட்டி இடையில் கட்டி  வந்தான்;  மரப்பட்டையையும்  ஆடையாகப்  பயன்படுத்தினான்.  இங்கனம் பண்டை மனிதன் பயன்படுத்திய புலித்தோலும் மான் தோலும்   மரவுரியையும் இன்றளவும் சமயத்துறையில் தூய வையாகக் கருதப்படுகின்றன.

 மொழி

முதல் மனிதன் பேச அறியாதவனாக இருந்தான்ச  பின்பு விலங்குகள்  ஓசை இடுவதையும் பறவைகள்  ஓசை இடுவதையும்   அவற்றைப் போல  ஓசையிடலானான்;  பின்பு   தான் விரும்பிய  பொருள்களை காட்டித்  தன் கருத்தைச்  சைகையால்  அறிவித்தான்;  அப்பொருள் கிடைக்காத பொழுது அவற்றின் உருவங்களை எழுதிக் காட்டி தன் கருத்தைத்  தெரிவித்தான்.  இங்ஙனம் பலவாறு முயன்று இறுதியில் தன் கருத்தை தெரிவிக்கும் சொற்களை கண்டறிந்தான். நமது நாட்டு மலைப் பகுதிகளில்  வாழும் சந்தாலியர், சவரர், கொண்டர் எனப்படும் இனத்தவர் பலரும் இன்று பேசிவரும் மொழியே பண்டை மக்கள் பேசியது என்று மொழி ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.  இம் மக்களே வளைய கற்கால மக்களின் வழி வந்தவர் எனவும்,  அப் பண்டை மக்கள் பேசிய மொழிகளிலிருந்து வந்தவையே இம்மக்கள் பேசி வரும் மொழிகள் என்றும் ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.  இம் மக்களை பழைய கற்கால மக்களின் வழி வந்தவர் எனவும், அப்  பண்டை மக்கள் பேசிய மொழிகளிலிருந்து வந்தவையே இன்று  இம்மக்கள் பேசிவரும் மொழிகள் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

 கலை

பற்களைக் கொண்டு செய்யப்பட்ட தாயத்துக்கள் பில்ல சுர்க்கம்   குகையில் கிடைத்தது என்பது முன்பு சொல்லப்பட்ட தன்றோ?  அவற்றின் வேலைப்பாட்டை  கொண்டு,  பழைய கற்கால மக்கள் ஓவியர் திட்டமும் அறிந்திருக்கலாம்.  அவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாதலின் காலப் போக்கில் அழிந்திருக்கலாம்.  தக்கணத்திலும்,  தென்னிந்தியாவிலும் உள்ள மலைகளை நன்கு பரிசோதித்த பின்,  இம் மக்களது கலைத்திறனை அறிவிக்கும் அடையாளங்கள்  புலப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 சமயம்

பழைய கற்கால மக்கள் இறந்தவர் உடல்களைப்   கிடைக்கவில்லை.  இதனால் ஆன்மாவைப் பற்றியும் மறுபிறப்பு பற்றியோ அவர்கள்   அறிந்திருந்தனர் என்பதைக் கூறுவதற்கில்லை.   அவர்களின் இக்கால கிராம தேவதைகளை உணர்த்தும் 'கதை' (ஆயுதம்)  முதலிய  கல்லுருவங்களை  வழிபட்டு வந்தனர் என்று கூறலாம்.  கிராம மக்களிடம் இன்றுள்ள தேவர் வழக்கத்தைவிட தேவதைகளின் வணக்கம் நிறைந்திருப்பதை நோக்க,  பழைய கற்கால மக்களிடமும் பெண்ணினமே சிறப்புற்றிருந்தது என்று கூறலாம்.   பெண்ணிமை  சிறப்புற்ற மக்களிடமே தேவதைகள் வழிபாடு மிகுந்து இருக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை.  காலப்போக்கில் இப்பலவகை  கிராம தேவதைகள்  காளியின் பணிப்பெண்ணாக அல்லது காளியின் அம்சங்களாக செய்யப்பட்டு விட்டன.

கொண்டரிடம்  மக்களை பலியிடும் வழக்கம் அண்மைக் காலம் வரை இருந்து வந்தது.  இவ்விரண்டையும் காண,  பண்டைக்  கற்கால மக்களிடமும் இவ் வழக்கம் இருந்து வந்தது என்று கூறலாம்.  எருமை பலியும் சவரர்  வழக்கத்தில் இருப்பதால்,  பண்டைக்காலத்தில்  எருமை பலியும்  இருந்தது என்று கூறலாம்.    கொண்டரும் சவரரும்  தேவதைகளுக்கு  இப்பலிகளையிட்டு,  மது அருந்தி ஒரு வகை  கூத்தில்  ஈடுபடுவதால் இன்றளவும் வழக்கமாக இருக்கிறது.  இப்பழக்கம் பழைய கற்கால மக்களிடமிருந்து இவர்களுக்கு வழிவழியாக வந்தது என்று கூடுதல் பொருத்தமாகும்.