கோணோரிராயன்

 சோழர்,  பாண்டியன் வீழ்ச்சிக்குப் பிறகு,  தமிழகத்தில் ஏராளமான குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்,  அவர்கள் வெளியிட்ட நாணயங்களில்  தம்  பெயர்களையும், சிலர் ஊர்,  கடவுள் பெயர்களையும்,  தமிழில் பொறித்து வெளியிட்டனர்.  சோழ மண்டலத்தில் சில பகுதிகளையும் தொண்டை மண்டலத்தில்  சில பகுதிகளையும் கோனேரி ராயன் ஆட்சி செய்தான்.  இம்மன்னனின் இயற்பெயர் வைத்தியநாத காலிங்கராயன்.  இம்மன்னன் பெற்ற விருதுகள் ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வரன் பட்டுக் கட்டாரிகாஞ்சிபுர வரதீஸ்வரன் கோணோரி மஹா  இராசா்  எனக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.  இவனது ஆட்சிக்காலம் தஞ்சாவூர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய  "தமிழ் மன்னன் கோனேரி ராயன்" என்ற நூலில் கிபி 1471இருந்து கிபி 1495 என்றும்,  தஞ்சை ஆறுமுகம் சீதாராமன் எழுதிய தமிழகக் காசுகள் கிபி என்ற நூலில் 1486 லிருந்து கிபி1495 என்றும் குறிப்பிட்டுள்ளார்.  ஆக இம்மன்னனின் தொடக்க ஆட்சிக் காலம் குறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. சம  காலத்தில் மன்னர்கள் போலவே இம் மன்னனும் மூன்று வரிகளில்  தம் பெயரில் கோனேரி ராயன் என்று தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட நான்கு வகையான நாணயங்களை வெளியிட்டுள்ளார்.

ஒரு காசின்பின்பக்கத்தில் நிற்கும் காலையும் அதன்மேல் கட்டாரி (பரசு)  சினமும்,  பின்பக்கத்தில் கோனேரி ராயன் எழுத்துக்களும்,  நடுவே குத்துவாள் பொறிப்பும் உள்ளது.  இவகை நாணயங்கள் அனைத்தும்  கை தயாரிப்பு நாணயங்கள் என்பதால் ஒழுங்கற்ற வடிவமாகவே காணப்படுகின்றன.  திருச்சி 'திருமழபாடி'  சிவன் கோயிலில் இம்மன்னனின் மூன்று கல்வெட்டுகள் உள்ளன.  எந்த பேரரசுகளுக்கும் கட்டுப்படாத மன்னனாக ஆட்சி செய்த கோனேரி ராயன் தமிழை நேசித்த என்பது நாணயங்களில் பொறிக்கப் பட்டுள்ள தமிழைக்  கொண்டு அறிய முடிகிறது.

 கோனேரி ராயன் காசுகள்
 கோனேரிராயன் காசுகள்