பல்லவர் வரலாறு : Pallava History in Tamil

பல்லவர்கள்  கிபி நான்காம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் ஆளத் தொடங்கிவிட்டனர் எனலாம், ஆனால் ஏழாம் நூற்றாண்டில் தான் வலுப்பெற்றது. சிவஸ்கந்த வர்மனால்  தொடங்கப்பெற்ற  பல்லவர் ஆட்சி,  சுமார் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் சிம்மவிஷ்ணு காலத்தில்  விரிவடைந்தது. சங்க காலத்திற்குப் பிறகு பல்லவர் தம்  ஆட்சியே தமிழ் நாட்டில் சிறந்த வரலாற்றுக்கு ஒப்பற்ற ஆட்சியாய் விளங்கிற்று  எனலாம்.  பல்லவர் காலத்திலேயே தமிழ்நாட்டில் கலையும் இலக்கியமும்,  காவியமும் ஓவியமும், சித்திரமும் வளர்ந்த தோடு வளர்ந்த தோடு சமயங்களும் பல்வேறு போட்டிகளுக்கிடையே வளர்ந்து  வரலாயின, தமிழகத்தின் இருண்ட காலத்தில் தலைதூக்கி இருந்த சமணமும் பௌத்தமும் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் சைவ வைணவ சமயங்களுக்கு இடம் தந்து ஒதுங்கி விட்டன. பல்லவர் காலத்திலேயே அதற்கு முன் தமிழ்நாட்டில் கண்டிராத வகையில் கற்கோயில்களும் பல இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தன என்பது பொருந்தும்.  பல்லவர் காலம் தமிழ் வரலாற்றில் ஒரு சிறந்த காலமாகும்.

 பல்லவர்கள் யார் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற ஆய்வு ஐம்பது ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.  காஞ்சிபுரம் ஏறக்குறைய ஆறு நூறாண்டு காலம், கிபி 300  முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில்,  பல்லவர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. எனினும் பல்லவர்கள் ஆதியில் வாழ்ந்த இடம் இன்னதென்பது,  தமிழகத்துக்கு எப்படி வந்தனர் என்பது இன்னும் மறைபொருளாகவே இருக்கின்றன.  சங்க இலக்கியங்களில் பல்லவர் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை.  ஆனால் அவர் எழுதி வைத்துள்ள கல்வெட்டுகள்,  எழுதிக்கொடுத்த செப்பேடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களை பற்றிய வரலாற்றை ஒருவராக வரையருக்கலாம்.

பல்லவர்களுடைய கல்வெட்டுகள் மகேந்திரவாடி,  தளவானூர்,  பல்லாவரம்,  திருச்சிராப்பள்ளி,  திருக்கழுக்குன்றம்,  வல்லம், மாமண்டுா், மண்டகப்பட்டு,  சித்தன்னவாசல்,  மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
பல்லவர்கள் முதன்முதல் பிராகிருத மொழியில் சாசனங்களைப் பொறித்து வந்தனர் (கிபி 250-350). பிறகு  சமஸ்கிருத மொழியில் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் பொறிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர்.  கிபி ஏழாம் நூற்றாண்டில் கிரந்த-தமிழ் எழுத்தில் எழுதப்பட்டன.

பல்லவர்களின் அரசியல் முறைகள் ஆதியில் சாதவாகனாரின் அரசியல் முறைகளுடனும்,  கௌடில்யரின் அர்த்தசாஸ்திரக்  கோட்பாடுகளுடனும்  மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. பல்லவருடைய பண்பாடுகள் பலவும் தமிழ் மன்னருடைய பண்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபாடாக காணப்பட்டன. அவர்கள் வடமொழியையே போற்றி வளர்த்தனர்.  இக்காரணங்களை கொண்டு  பல்லவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

 வரலாற்று மூலங்கள்

 பல்லவர்கள் தமிழகத்தை ஏறத்தாழ  600 வருட காலம் (கிபி  300 முதல் கிபி 900 வரை)  ஆண்டார்கள்.  அவர்களோடு வட மேற்கே இருந்த  கங்கர்கள் நட்புடன் வாழ்ந்தார்கள்.  ஆனால் கதம்பர்கள் பல முறை  போர் புரிந்தனர்.   கதம்பர்களுக்கும்  வடபால் இருந்த சாளுக்கியர்கள் பல்லவர்களுக்கு கொடிய பகைவர்கள்.  சாளுக்கியருக்கு பின் வந்த இராட்டிரகூடர்கள்  பல்லவர்களோடு உறவும் பகையும் கொண்டிருந்தனர்.  பாண்டியர்கள் பலமுறை  பல்லவரோடு போர் புரிந்தனர்.  இந்த செய்திகள் எல்லாம்,  பாண்டியர்,  கங்கர், கதம்பர்,  சாளுக்கியர், இராட்டிரகூடர்,  பல்லவர் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.  இவை பல்லவர் வரலாற்றுக்குரிய மூலங்களில் மிகச் சிறந்த சான்றுகளாகும்.

 பல்லவர்  மலைச்சரிவுகளை குடைந்தும்,  ஒற்றை கற்களை கோயில்களாக குடைந்தும்,  பாறைகளை கோயில்களாக  குடைந்தும்  தங்கள்  சமயப் பற்றையும்,  கலையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.   அக்கோயில்களில் எல்லாம் அவர்கள் வெட்டுவித்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.  இவை அவர்தம் வரலாற்றை அறிய அமைந்துள்ள இரண்டாம் வகை சான்றுகளாகும்.
 மகேந்திர தடாகம்,  சித்திர மேடத் தடாகம், வயிற  மேகன் வாய்க்கால்,  பரமேஸ்வர விண்ணகரம்,  பல்லவன் ஈஸ்வரன்,  மகேந்திரப்பள்ளி என்ற இடங்களின் பெயர்கள் பல்லவர்கள் இந்நாட்டை யாண்ட உண்மையை உணர்த்துவனவாகும்.

 தமிழகத்தில்  அகழ்ந்து எடுக்கப்பட்ட  பொருள்களுள் நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை.  அவற்றுள் தமிழகத்தை ஆண்ட சோழ பாண்டிய பல்லவ நாணயங்கள் கிடைத்துள்ளன.  இவை நான்காம் வகை சான்றுகளாகும்.

 பல்லவர்கள் ஈழநாட்டு இளவரசனுக்கு கப்பற்படை உதவி செய்தனர் என்று இலங்கை வரலாற்று நூலான ' மகாவம்சம்' கூறுகிறது.  பல்லவர் ஆட்சியில் இருந்த நாகப்பட்டினம் அக்காலத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது.  அங்கு ஒரு பௌத்த கோயில் இருந்தது.  தமிழகத்தோடு வணிகம் செய்த சீன நாட்டு  வணிகர்கள் நலனுக்காக அக்கோயில் பயன்பட்டது.  சீனர்கள் பல்லவர்களோடு கடல் வணிக உறவு கொண்டிருந்தனர்.   இச்செய்திகள் எல்லாம் சீன நூல்களில் காணப்படுகின்றன.   இங்ஙனம் அயல்நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்புகள் பல்லவர்  வரலாற்றில் அமைந்த மூலங்களில் ஒன்றாகும்.

 பல்லவரைப் பற்றி பேசும் தமிழ் இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாகும்.  குகைக் கோயில்களில் வெட்டப்பட்டுள்ள தனிப்பாடல்கள்,  தேவாரத்தில் காணப்படும்  பல்லவரை பற்றிய குறிப்புகள்,  மூன்றாம் நந்திவர்ம பல்லவன் பற்றி நந்திக்கலம்பகம்,  அக்காலத்தில் செய்யப்பெற்ற பாரத வெண்பா,  யாப்பருங்கல  விருத்தியுரையில் காணப்படும்  பல்லவரை பற்றிய தனிப் பாடல்கள் என்பன பல்லவர் ஆட்சி  குறிக்கும் இலக்கிய சான்றுகள் ஆகும். இவற்றோடு பல்லவர் ஆட்சியில் எழுதப்பெற்ற மத்தவிலாச பிரகணம் ( மகேந்திரவர்மன் எழுதியது)  பாரவி என்ற வடமொழி புலவர் எழுதிய   'கிராதார்ச்சுனியம்',  தாண்டி என்பவர் எழுதிய  'காவிய தர்சம்'   முதலிய வடமொழி நூல்கள் தமிழகத்தில் பல்லவர் ஆட்சியை உறுதிப்படுத்துவன வாகும்.  இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகளைக் கொண்டே  பல்லவர் வரலாறு கட்டப்பட்டுள்ளது.  பல்லவர் கால இலக்கியம்,  ஓவியங்கள் கோயில்கள் இவற்றைக் கொண்டே பல்லவர் கால தமிழக பண்பாட்டை நாம் அறிகின்றோம்.

பல்லவர் கால  நாணயங்கள் (Pallava coins)

பல்லவர் கால கல்வெட்டுகளில் கானம்,    கழஞ்சு,  காசு,  பழங்காசு,  ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.  கழஞ்சு,  நாணயமாக இல்லாமல் போன் கட்டியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  அதே நேரத்தில் காணம் நாணயமாக வழங்கி இருக்கின்றது.  காசு,  பழங்காசு என்பவைகளும் தங்க நாணயங்கள் என்று டாக்டர் சண்முகம் கூறியுள்ளார். பல்லவர் காலக் காசுகள் பெரும்பாலும் செம்பு,  வெள்ளி, ஈயம் ஆகியவற்றால் செய்யப்பட்டவையே பெரும்பாலும் கிடைத்துள்ளன.  இவர்கள் காலத்திய  தங்க நாணயங்கள்  2  கிடைத்துள்ளதாக திருஞானசம்பந்தம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் இவர்கள் காலத்தில் காசுகள் பெரும்பாலும் பட்ட வடிவத்திலேயே இருந்திருக்கின்றன.
பெரும்பாலான பல்லவ நாணயங்கள் நந்தி இலச்சினை உடையவை.  சில,  இருப்பாய் மரங்களில் இலச்சினை உடையவை.  முன்னது பல்லவரது சைவ சமயப் பற்றையும்,  பின்னது அவர் தம் ஆழ்கடல் வணிகத்தினையும் குறிப்பிடுகின்றன.  காசின் முன்புறம்  ஸ்ரீ ஸ்வஸ்திகா, விளக்கு,  சங்கு,  சக்கரம்,  வில், மீன்,  குடை, குடம்,  குதிரை,  கோவில், சிங்கம், வேலியினுள் மரம்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ சிலவோ இடம்பெறும் என அறிகிறோம், 'கதா சித்ராட எனும் சொற்கள் சில காட்சிகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.  அவை மகேந்திர வர்மன் காலத்தவை என திரு.  மீனாட்சி கூறுகின்றார். நந்தி முத்திரை கொண்ட சில காடுகளில்  ஸ்ரீவரன்,  ஸ்ரீ நந்தி, மானபர என்ற சொற்கள் காணப்படுகின்றன.  இவை இரண்டாம் நரசிம்மன் காலத்தவை.  நந்தி இலச்சினைக்கு  மேல் ' மானவரா' என்னும் சொற்கள் சில காசுகளில் காணப்படுகின்றன.  இதுவும் இராசசிம்மன் காசாகும். சில காசுகளில் ஒரு பீடத்தின் மீது சங்கு வைக்கப்பட்டுள்ளது போல் பொறிக்கப்பட்டுள்ளது.  இக்காசுகள் வைணவ பற்றுடைய பல்லவர் காலத்தவை.  முதலாம் நரசிம்ம வர்மனும், இரண்டாம் நந்திவர்மனும் வைணவ பற்று உடையவர்கள்.  ஆதலின் சங்கு பொறிக்கப்பட்ட காசுகள் இவர்களது காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.  நண்டு,  ஆமை,  கப்பல் இவை பதிக்கப்பட்ட காசுகளும் சில கிடைக்கின்றன.  அவை பல்லவரின் கடல் வணிகம் சிறப்புகளை கூறுகின்றன.

இவர்கள் காசுகளில் காணப்படும் காளை,  சங்கு சக்கரம் கப்பல் உருவங்களைக் கொண்டு பல்லவர்கள் சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு மார்பகங்களையும் ஒரே சமயத்தில் அளித்துள்ளார்கள் என்பதும்.  கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் தெளிவாகின்றது. மேலும் நண்டு சிம்மம் மீன் வில்உருவங்கள் ராசிகளை குறிப்பதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. சைத்தன்யம்,  வேலியினுள் மரம்போன்ற உருவங்கள் இவர்கள் பௌத்த மதத்தை ஆதரித்தனர் என்பதைக் காட்டுகின்றன.

கிழக்காசிய நாடுகளில் இந்திய நாட்டின் பண்பாடு மற்றும் வர்த்தகத் தொடர்பை அறிவதற்காக டாக்டர் நெபுரு கராஷிமா  தலைமையில் தாய்லாந்து சென்ற குழுவினர் தமிழ்நாட்டைச் சார்ந்த இரு காசுகளை அங்கு கண்டறிந்தனர்.  அதில் ஒன்று சங்ககாலச் சோழர்கள் காசு,  மற்றொன்று பல்லவர் கால காசு இது1.5  சென்டிமீட்டர் விட்டம் உடையது.  இக்காசில் முன்பக்கத்தில் நிற்கும் காளை உருவமும்.  பின்பக்கம் இருப்பாய் மரங்களையுடைய கப்பல் உருவமும் காணப்படுகின்றன.  இக்காசில் எழுத்துக்கள் எதுவும் இல்லை. அகழ்வாய்வின் போது எதிர்பாராத கண்டுபிடிப்புகளாக பல்லவர் காலத்திய இல்ல புது வகையான காசுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன அவற்றில் மிகப் பழமையானவை ஒருபுறம் நிற்கும் காளை உருவமும்,  மற்றொருபுறம் குடமும்,  வேலியினுள் மரம் உம்முடைய காசுகள் ஆகும்.  இவ்வகை காசுகள் ஈயத்தால் செய்யப்பட்டவை.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை 1970-க்கும் 1976-க்கும்இடைப்பட்ட ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் மேற்கொண்ட அகழாய்வின் மூலம் பிற்கால பல்லவர் காலத்தில் காசுகள்  வார்ப்பு கருவிகள் மூன்றினை கண்டுபிடித்துள்ளது.  மத்திய அரசு தொல்லியல் துறையின் தென் மாவட்டம் காஞ்சிபுரத்தில்1962ல் நடத்திய அகழாய்வில் எட்டு இயக்காதீர்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.  இக்காசுகளில் ஒருபுறம் திமிலுடன் கூடிய நிற்கும் காளை உருவமும் காளைக்கு மேற்கு பகுதியில் ஸ்ரீவத்ஸம் அல்லது நந்தி பாதமும்பின்புறம் தாமரை மலர் அல்லது யாதொரு  ஒரு குறியீடும் காணப்படுகின்றன.  இக்காசுகளின் காலம் கிபி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.  அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்னையில் ஒரு பகுதியில் உள்ள திருவான்மியூரில் பல்லவர் கால ஈயக்காசு ஒன்றை கண்டறிந்துள்ளது.  இக் காசியிலும் ஒருபுறம் திமிலுடன் கூடிய நிற்கும் காளி உருவம்,  மறுபுறம் குடம் மற்றும் வேலியினுல் மரமும் காணப்படுகின்றன.  இதன் மூலம் கிபி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எழுத்துக்களுடன் கூடிய வேறு சில தலைவர்களும் கிடைத்துள்ளன.  ஒரு வகை காசில் வபு  என்றும்,  மற்றொரு வகையில் லக்ஷித என்றும்,  மற்றொரு வகையில் பரமேஸ்வரா என்றும் எழுதப் பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ள  காசில்  முன்பக்கம் வபு  என்று கிரந்த எழுத்தில்,  நிற்கும் காளை உருவமும், பின்பக்கத்தில் சங்கு உருவமும் காணப்படுகின்றன.  லக்ஷித  என்று எழுதப் பெற்றுள்ள  காசு முதலாம் மகேந்திரவர்மன் காலத்தையும் பரமேஸ்வரா என்று குறிக்கப்பெற்றுள்ள  காசு பரமேஸ்வரவர்மன் காலத்தையும் சார்ந்தவையாகும்.

பல்லவ மன்னர்கள்

சிம்ம விஷ்ணு   (கிபி 575-600)

சிம்மவிஷ்ணு களப்பிரர்களை தோற்கடித்து பல்லவ பேரரசை தோற்றுவித்தவர்.  இவர் சேர, சோழ, பாண்டிய, மாளவரையும்,  சிங்களரையும்  தோற்கடித்தார் என்று காசக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.  இவருடைய ஆட்சி தெற்கில் கும்பகோணம் வரையில் பரவியிருந்தது.  இவருடைய அரசவைப் புலவராக  பாரவி என்பவர் 'கிராதார்ச்சுனீயம்'  என்ற வடமொழி கவிதையை எழுதினார். சிம்மவிஷ்ணுவின் உருவமும்  அவருடைய இரு மனைவிகளின் உருவமும் மாமல்லபுரத்தில் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

மகேந்திரவர்மன் (கிபி 600-630)

 சிம்மவிஷ்ணுவின் மறைவிற்குப் பிறகு அவனது மகன் மகேந்திரவர்மன்  ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.  இவன் ஆரம்பகாலத்தில் சமணனாக இருந்து  அப்பரால் சைவனாக மாரியம்மன்.  இவன் காலத்தில் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்து வந்தான் அவனை புள்ளூரில் கிபி 620ல் அவனுக்கு எதிராக போர் புரிந்தான்.  மகேந்திர வர்மன் மாமண்டூர்,  மகேந்திரவாடி,  திருவல்லம்,  திருச்சி,  மண்டகப்பட்டு,  சித்தன்னவாசல்  முதலிய இடங்களில் கோயில்களை அமைத்து உள்ளார். மருமகளை முதலில் அமைத்த பெருமை இவரையே சேரும்.  இவருக்கு சித்திரக்கார புலி,  மகாசேத்தகாரி, என பல பட்டங்கள் பெற்றவர். இவர் மிகச்சிறந்த நூல் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.  இவர் வடமொழியில் எழுதிய ' மத்தவிலாசப் பிரகாசனம்' என்ற நாடக நூல் சான்றாகும்.

நரசிம்மவர்மன் I (கிபி 630-668)

மகேந்திரவர்மன் அதுக்குப்பிறகு அவரது மகன் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.  கிபி 642 ல்  இரண்டாம் புலிகேசியுடன் மணிமங்கலத்தில் போரிட்டு வாதாபியை வென்றார்.  புலிகேசிக்கு உரிய  மாமல்லன் என்ற பட்டத்தைப் பெற்றான்.  இந்த போரில் வெல்வதற்கு பெரும் காரணமாக இருந்தவர் படைத்தலைவரான பரஞ்சோதியார் (பிற்காலத்தில் சிறுத்தொண்ட நாயனார் என அழைக்கப்பட்டார்).

நரசிம்மன் அமைத்த ஒற்றைக்கற் கோயில்கள் (பஞ்ச பாண்டவர் ரதம்)  தனிச் சிறப்பு உடையன.  சீன யாத்ரீகரான யுவான்சுவாங் இவரது காலத்திலே காஞ்சிபுரம் வந்தார். யுவான்சுவாங் தனது பயணக் குறிப்பில்  காஞ்சியின்  வளத்தையும்,  வீரத்தையும்,  கற்றோரையும்,  பௌத்த சமண மடங்களையும்,  அசோகன் நாட்டிய ஸ்தூபிகளையும் பெற்று, ஆறு மைல் அளவு அகலம் பெற்று கடற்கரையை நோக்கி 20 மைல்  பரந்து இருந்தது எனக் கூறியுள்ளார்.  

இரண்டாம் மகேந்திரவர்மன்  II  (கிபி 668-670)

முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இவர் காலத்திலும் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் பெரும்படையுடன் வந்து பல்லவ நாட்டு உடன் போர் புரிந்தான். இந்தப் போரில் இரண்டாம் மகேந்திரவர்மன் உயிரிழந்தார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவர் ஆட்சி புரிந்தார்.

முதலாம் பரமேஸ்வரன் I (கிபி 670-680)

பரமேஸ்வரன் இரண்டாம் புலிகேசியின் மகன்  முதலாம் விக்கிரமாதித்தனை  நல்லூர் என்ற இடத்தில் போர் புரிந்து வெற்றி கண்டார். இந்த வெற்றியால் விக்ரமாதித்தன் பெற்றிருந்த ' இரண ரசிகன்' என்னும் பட்டத்தை பெற்றான்.  தன்னை இரண ஜெயன்  என்றும் அழைத்துக் கொண்டான்.  காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் என்னும் ஊரில் முதன் முதலில் கற்கோயில் (கற்றளி) அமைத்த பெருமை பரமேஸ்வரனுக்கு உண்டு.

 இரண்டாம் நரசிம்மன் II (கிபி 680-720)

 இரண்டாம் நரசிம்மன் காலத்தில் பெரும் போர் எதுவும் நிகழவில்லை.  இவர் லட்சத்தீவுகளை வென்றான்.  சமய வாழ்விலும் கலை வாழ்விலும் பெரும் பங்கு கொண்டான்.  இதனாலேயே இவர் சிவ சூடாமணி,   ரிஷப லாஞ்சனன், சங்கர பக்தன்,  நடன பிரியன்,  அத்யந்த காமன் முதலிய பெயர்களால் புலனாகும்.  இம்மன்னன் அமைத்த கோவில்கள் ஏராளம்.  அவற்றுள் தனிச் சிறு  கோயில்களை கொண்ட கைலாசநாதர் கோயில் சிறப்புடையது,  சுதையால் சிவனின் பல நடனங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மாமலையில் கடற்கரையில் உள்ள பள்ளி கொண்டருளிய தேவர் கோயிலும்,  நாகப்பட்டினத்தில் சீன மன்னனுக்குக் கட்டிய பௌத்தப் பள்ளியும்,  இம்மன்னன் காலத்தே கட்டப்பட்டவையாகும்.  தண்டி என்னும்  வடமொழி புலவரும்,  பூசலார்எனும் நாயனாரும் இவன் காலத்தவர் அவர்.  

இரண்டாம் பரமேசுவரவர்மன் (கிபி 720-730)

இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பின் அவனது மகன் இரண்டாம் மகன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் பத்தாண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தான். இவர் தன் தந்தையை  போன்று அமைதி வழியில் ஆட்சி நடத்தினார்.. இவர் திருவடியில் சிவன் கோவில் கட்டுவதில் தீவிரமாக இருந்தார்.  இதை உணர்ந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்தன் கங்க நாடு அரசன் துர்விநீதனின் துணையுடன் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோற்கடிக்கப்பட்டார். போர்க்களத்திலேயே உயிர்த்தெழுந்தார்.

இரண்டாம் நந்திவர்மன்  (கிபி 730-795)

சிம்ம விஷ்ணுவின் பரம்பரை முடிய,  அவன் தம்பி பீமவர்மன் பரம்பரையில் வந்த மன்னன் நந்திவர்மன்.  இவன்தான் இராட்டிரகூடர் மரபில் வந்தவர். இவன் காலத்தில் போர்கள் பல ஏற்பட்டன.  பாண்டியர் சாளுக்கியர் இராட்டிரகூடர் முதலியவர்களுடன் போரிட்டான். உதயசந்திரன் என்ற படைத்தலைவன் மூலமாக இவன் தொடர் வெற்றிகளை கண்டான்.  இவன் வைணவ பற்றுள்ளவன். வைகுண்டநாதர்  கோயிலைக் கட்டினான் திருமங்கை ஆழ்வார் இவன் சமகாலத்தவர். இவன் 65  ஆண்டுகள் ஆண்ட பெருமையுடையவன்.

 தண்டிவர்மன்   (கிபி 795-845)

இரண்டாம் நந்திவர்மனை க்கு பின் அவனது மகன் தண்டிவர்மன் ஆட்சிக்கு வந்தார்.  இவர் இராஷ்டிரகூட  மன்னன் கோவிந்தனுக்கு,  துருவனுக்குமிடையே நடைபெற்ற வாரிசு உரிமைப் போரில் கோவிந்தனை ஆதரித்து இராஷ்டிரகூட நாட்டின் பகையைத் தேடிக் கொண்டான்.  இதில் துருவன் வாரிசுரிமை போராட்டத்தில் வெற்றி பெற நந்திவர்மனை தண்டிக்க நினைத்தார்.  இதன் விளைவாக துருவன் தன் மகன் மூன்றாம் கோவிந்தனை பெரும்படையுடன் காஞ்சிபுரத்தை  தாக்கி கைப்பற்றிக் கொண்டார். பாண்டியர்களில்  முதல் வரகுண பாண்டியனும்  பல்லவர் கட்டுப்பாட்டின் கீழிருந்த காவிரி பகுதியை கைப்பற்றிக் கொண்டார்.

மூன்றாம் நந்திவர்மன் (கிபி 845-866)

இவர் இராஷ்டிரகூட இளவரசி சங்கவை திருமணம் செய்து கொண்டார்.  இதனால் இவருக்கு இராஷ்டிரகூடரின்  நட்பு கிடைத்தது.இவர் தென்னாறு போரில்  இராஷ்டிரகூடர், கங்கர், சோழர்  ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பாண்டியன் சவாலை சந்தித்தார்.  பாண்டியரை வெற்றிக் கொண்டு 'தென்னாறு  எரிந்த  நந்திவர்மன்'  என்ற பட்டப் பெயர் பெற்றார்.  நந்திக் கலம்பகம்,  இவன் பெற்ற சிறப்புகளை கூறுகிறது.  பெருந்தேவனார்,  பாரத வெண்பாவில், " பைந்தமில்லை ஆகின்ற நந்தி"  என்று புகழ்ந்து கூறியுள்ளார். சுந்தரர்  'காடவர்கோன் கழற் சிங்கன்'  என பாராட்டியுள்ளார்.

நிருபதுங்கவர்மன் (கிபி 866-875)

மூன்றாம் நந்திவர்மன் இறந்த பின்பு அவரது மகன்களுக்கிடையே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. இதில் நிருபதுங்கவர்மன் இரண்டாம் வரகுண பாண்டியன் ஆதரித்தார்.  அபராஜிதனை சோழரும்,  கங்காரும் ஆதரித்தனர். இதில் அரிசிலாற்றங்கரையில் திருப்பெரும்புயம் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் தோல்வியுற்ற வரகுண பாண்டியன் போர்க்களத்தில் இருந்து தப்பிச் சென்றார்.  கங்க மன்னன் முதலாம் பிரதிநவிபுதி  கொல்லப்பட்டார்.  வெற்றி வாகை சூடிய நிருபதுங்கவர்மன் அரசாட்சி மேற்கொண்டார்.

 அபராஜிதன்  (கிபி 875 - 893)

நிருபதுங்கவர்மன் இறந்த பின் அவரது மகன் அபராஜிதன் சோழர்களின் துணையோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். முதலாம் ஆதித்த சோழன் மன்னர் ஆன பிறகு சோழ மண்டலத்தை பல்லவர் பிடியிலிருந்து விடுவிக்க முடிவு செய்தார். போர்க்களத்தில் அபராஜிதன் யானை மீது ஏறும் பொழுது வெட்டிக் கொல்லப்பட்டார். பல்லவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

பல்லவ மன்னர்கள்

குமாரவிஷ்ணு (கிபி 325-350), கந்தவர்மன் I (கிபி350-375), வீரவர்மன் (கிபி 375-400), ஸகந்தவர்மன் II (கிபி 400-436),  சிம்மவர்மன் (கிபி436-460), ஸகந்தவர்மன் III ( கிபி 460-480), சிம்மவர்மன் II (கிபி 480-500),  விஷ்ணுகோபவர்மன் II (500-525), சிம்ம  விஷ்ணு (கிபி 575-600), முதலாம் மகேந்திர வர்மன் (கிபி 600-630), முதலாம் நரசிம்ம வர்மன் (கிபி 630-668), இரண்டாம் மகேந்திரவர்மன் (கிபி 668-670), முதலாம் பரமேஸ்வரவர்மன் (கிபி 670-680), இரண்டாம் நரசிம்மவர்மன் (கிபி680-720), இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கிபி 720-730), இரண்டாம் நந்திவர்மன் (கிபி 730 795),  தண்டிவர்மன் (கிபி 795-845), மூன்றாம் நந்திவர்மன் (கிபி 845-866), நிருபதுங்கவர்மன் (கிபி 866-875), அபராஜிதன் (கிபி 875-893). அபராஜிதன் மறைவுக்குப் பின்பு  பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

பல்லவர்கள் யார்

பஹலவா்

 பல்லவர்கள் சாதவாகனர் ஆட்சியின் கீழ் பணிபுரிந்தவர்கள் என்றும், சாதவாகனரின் ஆட்சி குன்றி வரும்போது பல்லவர்கள் தொண்டை மண்டலத்தில் கைப்பற்றினார்கள் என்றும், அதற்கு முன்பு அவர்கள் சாகர்களுடன் இணைந்திருந்து மேற்கத்திய பகுதிகளிலும்,  சிந்து வெளியிலும், 'பஹலவா்' அல்லது பார்த்தியா்' என்ற பெயரில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.  அப்படியாயின் அவர்கள் காஞ்சிபுரத்துக்கு ஏன் வந்தார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. பல்லவர்களுடைய கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்  பஹலவா் என்னும் சொல்லே வழங்கப்படவில்லை.  பல்லவர்கள் அஸ்வமேத யாகம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  ஆனால் பஹலவர்களிடம்  இவ்வழக்கம் காணப்படவில்லை.

பார்த்தியா்

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில்  யானையின் மத்தகத்தை  போன்று வடிவமைக்கப்பட்ட உருவம் ஒன்று  மணிமுடி சூடிய  கோலத்தில் தீட்டப்பட்டுள்ளது.  இதைக்கொண்டு  பல்லவர்கள் பார்த்தியா்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறுவர்.  ஏனெனில்,  இந்தோ  பாக்டிரிய மன்னனான  டெமிட்டிரியஸ என்ற ஒருவனுடைய உருவம் அவனுடைய நாணயம் ஒன்றின்மேல் இத்தகைய முடியுடன் காட்சியளிக்கின்றது. இச் சான்று  ஒன்றை மட்டும் கொண்டு பல்லவர்கள் பார்த்தியா்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது பொருந்தாது.

சாதவாகனரின் கீழ் குறுநில மன்னர்

பல்லவர்களின் தளவானூர் குகைக் கல்வெட்டுகளில் மகேந்திரவர்ம பல்லவனே 'தொண்டை'  மாலை அணிந்தவன் எனக் குறிப்பிடப்படுகின்றான். பல்லவர்கள் சாதவாகனரின் கீழ் குறுநில மன்னராகவும், அலுவலராகவும் செயல்பட்டு வந்தனர் என்றும்,  ' பல்லவர்'  சொல்லும் தொண்டையர் என்னும் சொல்லும் ஒரு பொருளை குறிக்கும் என்றும்,  சாதவாகனப் பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு இப் பல்லவர்கள் காஞ்சிபுரத்தில் தம் பெயரில்  ஆட்சி பரம்பரை ஒன்றை தொடங்கினர் என்றும்,  அதன் பின்னர் தொண்டையர் என்னும் பெயர் மறைந்து பல்லவர் என்னும் பெயருக்கு இடம் கொடுத்தது என்றும் டாக்டர் எஸ் கிருஷ்ணசாமி ஐயங்கார் கருதுவார்.

பல்லவர சோழர் வழி வந்தோர்

வெல்வேற் கிள்ளிக்கும் பீலிவளை  என்ற நாக கன்னிகைக்கும் தொண்டைமான் இளந்திரையன் பிறந்தான்.  இவனுடைய பெயரில் தொண்டை மண்டலம் தோற்றுவிக்கப்பட்டது. இவ் வரலாற்றை  மணிமேகலை தருகின்றது. இளந்திரையன் நாக கன்னிகையால் கொடிகளலே சுற்றி அனுப்பப்பட்டவன் என்பது கதை,  கொடிகள் 'பல்லவம்' என்னும் பெயரை பெறுவதால் பல்லவத்தால் கட்டுண்டு வந்த இளந்திரையன் பரம்பரையினரே பல்லவர் என்பர் சிலர்.  அவர் கூற்று பொருந்துவதாக இல்லை.  இளந்திரையன் தமிழ் மன்னன்; சோழ மரபினன் காஞ்சியிலிருந்து ஆண்டவன்.  இவர்கள் அவன் பரம்பரை என்றால், முதற் பல்லவர்கள் வட மொழியான பிராக்கிருதம் போன்ற மொழியையே போற்றி வளர்த்தார்கள்.  

புலிந்தார்களே பல்லவர்கள்

பல்லவர்கள் தொண்டை மண்டலத்தில் தோன்றியவர்கள் என்னும்  கொள்கைக்கும் போதிய சான்றுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.  மௌரிய மன்னன் அசோகனின் குடிமக்களுள் புலிந்தர் என்றோர் இனத்தவரும் இருந்தனர் என அப் பேரரசனின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  அக்காலத்தில் தொண்டை மண்டலத்தில் குறும்பர் என்ற  ஓரித்தினர் வாழ்ந்து வந்தனர்ன. அவர்களே அப் புலிந்தார்கள்  போலும். தொண்டை மண்டலத்தில்  இருபெரும் கோட்டங்களில் ஒன்றுக்கு புலி  நாடு என்றும் மற்றொன்றுக்கு புலியூர் கோட்டம் என்றும் பெயர் வழங்கிற்று.  வயலூர் என்ற இடத்தில் இராக  சிம்ரனின் தூண் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அக் கல்வெட்டில் அசோகனின் முன் பரம்பரையை கூறி வரும்போது அஸ்வத்தாமனின் பெயரையடுத்தும், அசோகன் பெயருக்கு முன்பும் 'பல்லவன்' என்னும் ஒரு பெயர் காணப்படுகின்றது.  எனவே,  அசோகனுக்கு முன்னே பல்லவ பரம்பரை இருந்ததாக ஊகிக்க இடம் உள்ளது.  அசோகரின் கல்வெட்டுக்கள் சிலவற்றுல் புலிந்தா்கள் பலடா் என்னும் சொல் காலப்போக்கில்  பல்லவர்  என்றும் மாறி இருக்க கூடும் என்றும் சிலர் எண்ணுகின்றனர். தொண்டை மண்டலம் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி முதல் நூற்றாண்டு வரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கியதற்கு மணிமேகலை சான்று பகர்கின்றது.

சாதவாகனரின்  ஆட்சி  கிபி 225 ல்  வீழ்ச்சியுற்றது.  அவர்களுக்குத் பின்னர் பல்லவரே  முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர்.  நாளடைவில் அவர்களுடைய ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே கிருஷ்ணா நதிக்கரையில் பரவிற்று.  மயிதவொளு, ஹீரஹதஹள்ளி எனினும் ஊர்களில் கிடைத்துள்ள சிவஸ்கந்தவர்மனின் பிராகிருத மொழி செப்பேடுகளில் இதற்கு சான்றுகள் காணப்படுகின்றன. சாதவாகனருடன் தொடர்புகொண்டிருந்த காரணத்தால் பல்லவர்கள் பிராகிருத மொழிகளிலும்,  சமஸ்கிருத மொழியிலும் பயிற்றுவிப்பாளராக இருந்தனர்; அம்மொழியிலேயே சாசனங்களை பொறித்து வைத்தனர்.  ஆகவே,  பல்லவர்கள் சாதவாகனர்களின்  குலத்தை சேர்ந்தவர்கள் என ஊகிக்கவும் இடம் உண்டு.

பல்லவர்கள் தமிழர்களல்லர்

 பல்லவர்களை பற்றி ஆய்வு செய்யும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அவர்கள் தமிழர்கள் அல்ல ஏனெனில் பல்லவ மன்னர்களின் பெயர்கள் தமிழ் பெயர்கள் அல்ல,  அவர்களது பட்டயங்கள் பிராகிருத,  சமஸ்கிருத மொழியில் உள்ளன, தமிழ் மரபுக்கு எதிரான கோத்திரம் முறையை பின்பற்றியது,  சங்க இலக்கியங்களில் இவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை,  களப்பிரர்களை போல பல்லவர்களும் வெளியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் என்று தோன்றுகிறது.

பல்லவர் ஆட்சி

 பல்லவ பெருநாடு பல  இராஷ்டிரங்களாக(மண்டலங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது.  ஒவ்வொரு இராஷ்டிரமும் பல விஷயங்களாக (கோட்டங்களாக)  பிரிக்கப்பட்டிருந்தது.  பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட ஆந்திரா நாட்டில்  முரண்டகராஷ்டிரம், வேங்கிராஷ்டிரம் இன்னும் மண்டலங்கள் இருந்தன.  தொண்டை மண்டலம்  'தண்டகராஷ்டிரம்'  என்று சொல்லப்பட்டது.  தொண்டை நாட்டில் கோட்டம்,  நாடு ஊர் என்றும் பிரிவுகள் இருந்தன.

 தந்தைக்குப் பிறகு மூத்த மகனே கட்டத்தை அடைந்தான்.   அரசன் திடீரென பிள்ளையின்றி இறந்தால் அமைச்சரும் நாட்டு பெருமக்களும் ஒன்று கூடி அரச மரபினர் ஒருவரை தேர்ந்தெடுத்து அரசர் ஆக்குதல் மரபு.  இங்கனம் அரசனாக பட்டவனே இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன்.

 ஒவ்வொரு அரசனும் தன்  செயலுக்கு ஏற்ப விருதுப் பெயர்களை தாங்கினான். 'மகாமல்லன்'  என்பது முதலாம் நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்.

 பல்லவர் அரசாங்க இலட்சினை நந்தி இலச்சினை,  எனவே,  அவர்கள் பொதுவாக சைவ சமயத்தினர் என்று சொல்லலாம்.  ஆயினும்,  எல்லா பல்லவ மன்னரும்  சைவர் அல்லர்;  எனினும் சமயப் பொறை உடையவர்.

 ஆட்சி செய்ய அமைச்சரும் பலவகை அரசாங்க அலுவலகம் இருந்தனர்.  சங்ககால தமிழ் அரசர் தம் அமைச்சருக்கும் நாளை தலைவருக்கும் பட்டங்கள் வழங்கியது போலவே பல்லவரும் பட்டங்கள் வழங்கி வந்தனர்.  அரசாங்க உயர் அலுவலருள்  உள்படு கருமத் தலைவர்(Private secretaries),  வாயில்  கேட்பான்(secretaries),  கீழ்வாயில் கேட்பான் (Under secretaries),  என்பவர் குறிப்பிடத்தக்கவர்,  பல்லவ நாட்டு தலைநகரான காஞ்சியில் பெரிய நீதிமன்றம் இருந்தது.  'அதிகரணம்' என்பது அதன் பெயர். ' காரணம்'  என்பது சிற்றூரிலிருந்து  அரங் கூறவை என்னலாம்.  நீதிபதிகள் 'அதிகாரிகள்'  எனப்பட்டனர்.  உயர் நீதிமன்றம்(High Court) ' தருமாசனம்'  எனப்பட்டது.  அரசனுடைய பட்டயங்களை எழுதியவர் 'காரணிகர்'  எனப்பட்டனர்.

 பல்லவரிடம் காலாட்படை குதிரைப்படை,  யானைப்படை,  கடற்படை இருந்தன.  கடற்படையால் பல்லவர் ஈழ நாட்டில் செல்வாக்கை ஏற்படுத்தினர்;  கடல் வணிகத்தை பெருக்கினர்.

 நாடு என்பது சிற்றுரைவிடப் பெரியது;  கூட்டத்தை விட சிறியது.  பல  சிற்றூர்கள் சேர்ந்தது நாடு.  பல நாடுகள் சேர்ந்தது ஒரு  கோட்டம்.  நாட்டு அதிகாரிகள் ' நாட்டார்'  எனப்பட்டனர். 'ஊரார்' என்பவர் சிற்றூரைச் சேர்ந்த பெருமக்கள்.

 கோவிலுக்கு விடப்பட்ட நிலங்கள், சிற்றூர்கள்  முதலியன ' தேவதானம்'  எனப்பட்டன.  அவற்றிற்கு வரிஇல்லை.  சமணருக்கும் பௌத்தருக்கும் விடப்பட்ட நிலங்கள் 'பள்ளிச் சந்தம்'  எனப்பட்டன.

 ஊராட்சி மன்றங்கள்

 சங்க காலத்திலிருந்து கிராம ஆட்சிமுறை தொடர்ந்து பல்லவர் காலத்திலும் இருந்து வந்தது என்பதற்கு கல்வெட்டுகளை சான்றுகளாகின்றன.   பல்லவர் கால நாயன்மார்களைப் பற்றி  பேசும் பெரியபுராணத்தில் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளன.  ஊரவையார்   ஊர் நிலங்களையும்  தோட்டங்களையும்  நீர்நிலைகளையும் கவனித்துக் கொண்டனர்;   ஊரின் நன்செய், புன்செய்,  முதலியவற்றிற்குறிய வரிகளை வசூலித்தனர்;  பஞ்ச காலத்தில் குடிகள் துன்பப்படாமல் இருக்க, விளைச்சல் உள்ள காலங்களிலேயே விளைபொருட்களை ஓரளவுக்கு ஒதுக்கி பாதுகாத்தனர்;  கிராம வழக்குகளை விசாரித்து நீதி வழங்கினர்;  ஊர் பொது வேலைகளிலும் கோவில் தொடர்பான வேலைகளையும் கண்காணித்து வந்தனர்.

ஊரவையார் இவ்வாறு பல உட் பிரிவினராகப்  பிரிந்து,  பல துறைகளிலும் நுழைந்து,  ஊராட்சியை திறம்பட செய்து வந்தனர்.  ஒவ்வொரு பிரிவும் ' வாரியம்' எனப்பட்டது. ஊரவையார் ' பெருமக்கள்'  எனப்பட்டனர்.  ஏரி வாரிய பெருமக்கள்,  தோட்ட வாரியம் பெருமக்கள் என பல பிரிவுகள் ஊரவையில் இருந்தன.  கோவில் ஆட்சியை கவனித்தவர் 'அமிர்த கணத்தார்'  எனப்பட்டனர். கோவில் முதலியன பற்றி பொது செயல்களில் ஊரவை யாரும் அமிர்த கணத்தாரும்  உயர்ந்து பணியாற்றினர்.  அமிர்த கணத்தார் கோவிலுக்கு வரும் தானங்களை பெறுவர்;  கோவில் பண்டாரத்திலிருந்து பணத்தை குறித்த வட்டிக்கு  கடன் தருவார்;  இவற்றின் தொடர்பான பத்திரங்களை பாதுகாப்பர் கோவில் தொடர்பான எல்லாவற்றையும்  கவனிப்பர்.  இவர்கள் கோவில் தொடர்பான செய்திகளில் ஊரவையார்க்குப்  பொறுப்புள்ளவராவர்.

 மங்கலம்,  குடி,  பிரம்மதேசம்,  பிரம்மபுரி என்று பெயர் கொண்ட புதிய சிற்றூர்கள் பிராமணர் என்று உண்டானவை.  அங்கிருந்த அவைகள் 'சபைகள்'  என்று பெயர் பெற்றன.

  பலவகை வரிகள்

 தென்னை, பனை,  பாக்கு முதலிய மரங்களை பயிரிட்டவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர்.  சாரு இறக்க வரி,  பாகு செய்ய  வரி,  பாக்குக்கு  வரி முதலிய வரிகள் இருந்தன. செங்கொடி, கருசராங்கண்ணி மருக்கொழுந்து,   குவளை செடி முதலியவற்றை பயிரிட வரி செலுத்த வேண்டி இருந்தது.  கால்நடைகளால் பிழைப்பவர்,  புரோகிதர், வேட்கோவர்,  பலவகை கொல்லர்,  சலவைத் தொழிலாளர்,  ஆடை தைப்பவர்,  ஆடை நெய்பவர்,   ஆடை விற்பவர்,  நூல் நிற்பவர்,  நெய் மணம் செய்பவர்,  ஓடக்காரர்,  பணஞ்சாறு எடுப்பவர்,  தரகர்,  எண்ணெய் ஆட்டுபவர்,  மீன் பிடிப்பவர் முதலிய பலவகை தொழிலாளரும் அவரவர் தொழிலுக்குரிய வரியை அரசாங்கத்திற்கு செலுத்தி வந்தனர்.

 இங்கனம் குடிமக்களால் செலுத்தப்பட்ட  வரி பல்லவர் நாணயமாகவும் நெல் முதலிய பண்டங்களாகவும் இருந்தன.  ஒவ்வொரு கிராமத்தின் நிலங்களும் நன்கு அளக்கப்பட்டு  வரி விதிக்கப்பட்டிருந்தன.  பாலாறு காவிரி முதலிய ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன.  இப்பெரிய கால்வாய்களில் இருந்து பிரிந்த  கிளை கால்வாய்கள் பல.  ஆற்றுப் பாய்ச்சல் இல்லாத இடங்களில் பெரிய ஏரிகள் அமைக்கப்பட்டிருந்தன.  அவற்றிலிருந்து நீரை வயல்களுக்கு கொண்டு செல்ல கால்வாய்கள் இருந்தன.  நீர் வரி அக்காலத்தில் இருந்தது.  பலவகை அளவைகள்  கூழி,  வேலி என்பன அளவைகளாக இருந்தன.  அவற்றோடு நாலு சாண் கோல்,  பன்னிரு சாண் கோல்   பதினாறுசாண்   கோல் முதலிய நீட்டலளவைகளும் இருந்தன.  இவற்றின் உதவியால் நிறங்கள் அளக்கப்பெற்றன.  உழகுக்கு,  ஊரி,  நாழி,  பிடி,  கோடு,  மரக்கால், பதக்கு, குருணி, காடி,  காலம் என் முகத்தலளவைகள் வழக்கில் இருந்தன. பொன் முதலியவற்றை  நிறுக்கக்  கழஞ்சு,  மஞ்சாடி என்னும் நிறுத்தலளவைகள் வழக்கில் இருந்தன.  பல்லவர் காசுகள்,  செம்பு, வெள்ளி,  பொன் இவற்றால் செய்யப்பட்டிருந்தன. 'துளைபோன்'  என்பது மாற்றுக்  குறையாததும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத துமான  பொற்காசு.  அது அரசாங்க அங்கீகாரம் பெற்றது மாற்றுக் குறையாது என்பதற்கு அடையாளமாக  திளையிடப்பட்டது. பொன், துளைப் பொன்,   பழங்காசு,  புதுக்காசு என்பன பல்லவர் காலத்தில் பல வகை காசுகள் வழக்கில் இருந்தன.

 ஊர் வழக்குகள் ஊரவையினராலையை பெரும்பாலும் தீர்க்கப்பட்டன.  கோவிலுக்கு விளக்கு ஏற்றுதல்,  கோவிலுக்கென்று  கால்நடைகளை விடுதல் என்பன போன்ற முறைகளில் தண்டங்கள் விதிக்கப்பட்டன.

 பல்லவர் காலத்து கலை வளர்ச்சி

கல்வி

    பல்லவர் முதலில் பாலி மொழியில் தம் பட்டயங்களை வெளியிட்டனர்.  பின்பு வடமொழியில் வெளியிட்டனர்,  வடமொழியில்  வல்லவர்க்கு நிலங்களும் ஊர்களும் மானியமாக வழங்கினர்;  வடமொழிப்  புலவர்களை ஆதரித்தனர்;  பர்கூர்,  திருப்பாதிரிப் புலியூர்,   கடிகாசலம் (சோழசிங்கபுரம்), காஞ்சி,  காவேரிபாக்கம் முதலிய ஊர்களில் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன.  இவ்வாறு தமிழ்மொழி கல்லூரிகள் இருந்தன என்பதற்கு சான்று இல்லை. தமிழ்,  நாட்டு மொழி யானதால் அரசாங்க உதவி இல்லாமலேயே வளர்ந்தது  போலும்.  பல்லவர் ஆட்சியில் வைதிரும் சமணரும்  பௌத்தரும் வட மொழியை நன்கு வளர்த்தனர்.   சமணர் தமிழைக் கற்று பல நீதி நூல்களை செய்தனர்.  சைவத் திருமுறைகளும்  ஆழ்வார்  அருட் பாடல்களும் இக் காலத்தில்தான் தோன்றின.  இவர்களால் நாடெங்கும் பக்தி வெள்ளம் பரப்பப்பட்டது.  புழவர் சிலர் நந்திக்கலம்பகம்,  பாரத வெண்பா போன்ற சில நூல்களை இயற்றினார்.
  பல்லவ மன்னர்களால் ஆதரிக்க பெற்ற  பாரவி,  தாண்டி என்பவர் வடமொழி நூல்களை எழுதினர்.  மகேந்திர வர்மன் ' மத்தவிலாசப் பிரகசனம்'  என்ற வேடிக்கை நாடகத்தை வடமொழியில் எழுதினான்.  எனவே,  பல்லவர் காலத்தில் வடமொழியும் தமிழும் பல்லவ நாட்டில் வளர்ந்தன என்பது தெரிகிறது.

 கட்டிடக்கலை

 பல்லவர் காலத்து நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடப் பெற்ற கோவில்கள் ஏறத்தாழ 500 என்று சொல்லலாம்.  இத்துணை கோவில்களும் மண்,  மரம், செங்கல்,  சுண்ணாம்பு, உலோகம் இவற்றால் அமைந்தனவே,  இவற்றுள் சில பெரிய அளவில் அமைந்தன சில உயர்ந்த கோபுரங்களை கொண்டவை; சில பாடல்களைக் கொண்டவை;  சில கோவில்களில் விமானங்கள் தூங்குகின்ற யானை வடிவம் அமைந்தவை;  சில கோவில்கள் உயர்ந்த  மலைகள் மீது  கட்டப்பட்டவை.  கோச்செங்கண்ணன் என்ற சோழன் ஒருவன் 70 பெரும் கோயில்களைக் கட்டினான் என்பது கூறப்படுகிறது.  மாமல்லபுரத்து ரகங்கள் எல்லாம் அக்கால கோயில்களை கொண்டே அமைக்கப்பட்டவை.  கொண்டு கட்டப்பட்டவை காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவில்,  வைகுண்ட பெருமாள் கோவில் முதலியன.  இவ்வுண்மைகளை நோக்க பல்லவர் காலக் கட்டிடக்கலை  அறிவு சிறந்து இருந்தது என்பதை அறியலாம்.

 ஓவியக் கலை

 பல்லவர் அமைத்த குகைக் கோவில் சுவர்களிலும் கூரைகளிலும் பல   சாந்துகள் காணப்படுகின்றன.  இவை அக்காலத்தில் ஓவியங்கள்  தீட்டப் பெற்றிருந்தன என்பதை  அறிவிப்பனவாகும். சித்தன்னவாசல்  ஓவியங்களும் பல்லவர் கால ஓவியங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 சிற்பக்கலை

 கைலாசநாதர் கோவில் காஞ்சி வைகுண்ட பெருமாள்  கோவிலும் சிற்பக் கலைக்கூடம் எனலாம்.  கண்ணைக் கவரும் சிவபெருமான் நடன வகைகளை குறிக்கும்.  சிற்பங்களும் பிற வகை சிற்பங்களும் அக்கால சிற்பக்கலை வளர்ச்சியை நமக்கு அறிவிக்கும் சான்றுகளாகும்.

 இசைக்கலை

 மகேந்திர வர்மன்,   இராஜசிம்மன் போன்ற பல்லவர்கள் இசை, நடனம், நாடகம்  போன்ற நுண் கலைகளில்  விருப்பம் காட்டினர்.  மகேந்திரவர்மனது  இசை அறிவைக் குறிக்கும் கல்வெட்டு குடுமியான்மலையில் காணப்படுகிறது.  இராஜசிம்மன் 'வாத்ய வித்யாதரன்', ' ஆதோத்யதம்புரு'  என்று கல்வெட்டுகளில் போற்றப்படுகிறான்.  நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் பண்ணோடு பாடப்பட்டன.  அவற்றுள் பெரும்பாலான தமிழ் பண்கள்.  மழவம்,  மொந்தை,  தத்தலகம்,  உடுக்கை, தாளம், சல்லரி,  முதலிய பலவகை வாத்தியங்கள் அக்காலத்தில் இருந்தன என்பது தேவாரப்  பாடல்களால் தெரிகின்றது.

 நடனக் கலை

மகேந்திரன் செய்த வேடிக்கை நாடகத்தில் நடனம் பற்றிய பாராட்டு காணப்படுகிறது.  இராஜசிங்கன்  எழுப்பிய சிவபெருமான் கோயில்களில் நடனச் சிற்பங்கள் காணப்படுகின்றன.  நாயன்மார்,  ஆழ்வார் பாடல்களில் நடனக்கலை பற்றி குறிப்புகள் இருக்கின்றன.
 "கோவில் வலம் வந்த மடவார்கள்  நடமாட"  என்பது சம்பந்தர் தேவாரம்.  பல்லவர் காலத்து கோவில் சிற்பங்கள் மக்கள் நடனம் ஆடுவதையும் குறிக்கின்றன.  இவை அனைத்தையும் நோக்க.  பல்லவர் காலத்தில் நடனக்கலை நன்கு வளர்ச்சி பெற்றது என்று கூறலாம்.

நாடகக் கலை

 மகேந்திரவர்மன் மேலே சொல்லப் பெற்ற வேடிக்கை நாடகத்தை வடமொழியில் எழுதினான்.  இராஜா சிங்கனுக்காகவே வடமொழியில் சிறு நாடகங்கள் இயற்றப் பெற்றன என்னும் செய்திகள். அக்காலத்தில் நாடகக்கலை ஓரளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை தெரிவிக்கின்றன.  அரசருக்கு ஆடும் நாடகங்கள்,  பொதுமக்களுக்கு ஆடும் நாடகங்கள் என்று நாடகம் இருவகையாக இருந்திருக்க வேண்டும் என்பது கிபி 7 அல்லது எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட பெருங்கதையில் காணப்படும் குறிப்பு கொண்டு  தெளியலாம்.

 பல்லவர் காலச் சமயநிலை

 கிபி 300 முதல் கிபி 600 வரையில் பல்லவரும் கங்கரும் நட்புறவு கொண்டு  வாழ்ந்ததால்,   கங்க நாட்டில் இருந்த  சமண முனிவர்கள் தமிழ்நாட்டில் பரவி சமண சமயப் பிரச்சாரம் பலமாக செய்தனர். அவர்கள் சிறந்த வாதத் திறமை மிகுந்தவர்கள்.  ஆதலால் அவர்கள் சமயம் மிகுந்த செல்வாக்குப் பெற்றது.  அரசர்களும் அச்சமயத்தை ஆதரித்தனர். " அரசன் எவ்வழி,  எவ்வழி குடிகள்"  ஆதலால்,   குடிகளுள்ல  பலர் சமணத்தை பின்பற்றினர்.  இந்நிலையில் சைவமும் வைணமும்  வலிமை குன்றிய.  அவ்வமயம் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கண்ணன் தோன்றி 70 சிவன் கோயில்களை கட்டுவித்தான்.  தில்லையில் சிறப்புடைய கோயில் எழுப்புவித்தான்.
 கிபி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில்  சமணராக  இருந்து பின் சைவராக மாறிய திருநாவுக்கரசர் தொண்டை நாட்டில்  சமணத்தை கண்டித்து   சைவப் பிரச்சாரம் செய்தார்ச சமணர் இழைத்த தீமைகளில் இருந்து தப்பினார்.  அவரது தியாகத்தை கண்டு மக்கள் சைவத்தை கொண்டாடினர்.  சமணனாக இருந்த மகேந்திரவர்மனும் சைவனாக மாறினார்  மலைச்சரிவுகளை குடைந்து பல சிவன் கோயில்களை அமைத்தான்.  அவை 'குடைவரைக் கோயில்கள்' எனப்பட்டன.

 திருநாவுக்கரசரது முதுமைப் பருவத்தில் சம்பந்தர் தோன்றினார்.  அவர் சோழ நாட்டிலிருந்த பௌத்தர்களையும் பாண்டிய நாட்டில் இருந்த சமணர்களையும் வாதப்போரில்  வென்றார்.  பாண்டியன் நெடுமாறன் சமணத்திலிருந்து சைவ மாறினார்.  திருநாவுக்கரசர் ' பழையறை'  முதலிய இடங்களிலிருந்த சமணர் செல்வாக்கை ஒடுக்கினார்.  அவரும் சம்பந்தரும் தமிழகம் முழுவதும் சுற்றி  சைவ பிரச்சாரம் செய்தனர்.  இப்பிரச்சார வன்மையால் பௌத்தமும் சமணமும்  வலிகுன்றின.  சைவம் ஓங்கி வளர்ந்தது.  நாயன்மார் பலர் ஆங்காங்கே  இருந்து தவிர சமயத்  தொண்டில் ஈடுபட்டனர்.  அப்பர்,  சம்பந்தருடைய திருப்பதிகங்கள் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

  ஆழ்வார் பன்னிருவரும் பக்திப் பாடல்களைப் பாடினர்.  108 திருப்பதிகளில் இருந்த பெருமாள் கோயில்கள் சிறப்புப் பெற்றன.  பல்லவர் வைணவத்தையும் நன்கு வளர்த்தனர்.  பாண்டியரும் ஓரளவு வைணவத்தை வளர்த்தனர்.  திருநாவுக்கரசரை போலவே திருமங்கையாழ்வாரும் பல பெருமாள் கோயில்களை தரிசித்து அருட் பாடல்களைப் பாடியுள்ளார்.  முதலாம்  நரசிம்மவர்மன்,  இரண்டாம் நந்திவர்மன்,  தந்திவர்மன் என்போர் சிறந்த வைணவ பக்தர்கள்.

 கிபி 9 ஆம் நூற்றாண்டில் சுந்தரரும் மாணிக்கவாசகரும் தோன்றினர்.  சுந்தரர் இடந் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடினார்.  அவர் காலத்தில் இருந்த நாயன்மார்களும் முன்னோரைப் போலவே சமய தொண்டில் ஈடுபட்டனர்.  பின்வந்த மாணிக்கவாசகரும் ' திருவாசகம்'   என்னும் பக்தி நூலைப் பாடி அழியாப் புகழ் பெற்றார். ' திருக்கோவை'  என்னும் ஆன்மிக காதலை வளர்க்கும் கோவை நூலையும் பாடினார்.  இத்தகைய அரிய தொண்டுகளால்,  நாளடைவில் சமண பௌத்த சமயங்கள் தமது செல்வாக்கை இழந்தன. சைவ, வைணவ சமயங்கள் நாட்டு சமயங்களாக வளர்ந்தன.

 பல்லவர் கால கோயில்கள்

 மகேந்திரவர்மன் மலைச் சரிவுகளை கோயில்களாக குடைந்தான்.  அவனுக்குப் பின் வந்த நரசிம்மவர்மன் தனித்தனியே இருந்த பாறைகளையே  கோவில்களாக குடைவித்தான்.  அவை 'ஒற்றைக்கல் கோயில்கள்'  எனப்படும் மாமல்லபுரத்தில் உள்ள கோவில்களில் பல சிவன் கோயில்கள் ஆகும்.  இரண்டாம் நரசிம்மவர்மன் கற்களை உடைத்து ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி கோவில் கட்டினான்.  காஞ்சி கைலாசநாதர்  கோயில் இம்முறையில் கட்டப்பட்ட முதல் கோவில் ஆகும்.  இதனைப் பார்த்து பின் வந்த அரசர்கள் பல கோவில்களைக் கட்டினார்கள்.  இவை ' கற்றளிகல்'  எனப் பெயர் பெற்றன.

 அரசர்கள் கோவில்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் வழங்கினர்.  குடிமக்களும் தத்தம் இயல்புக்கு ஏற்றவாறு கோவில் வளர்ச்சிக்கு உதவினார்.  இங்கனம் மன்னனும் மக்களும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் ஒவ்வொரு கோவிலும் பூசையும் விழாக்களும் குறைவின்றி நடக்கத் தொடங்கின.  கோவில்களின் வருவாய்,    செலவு இவைகளை கவனிக்க கோவில் ஆட்சி ஏற்பட்டது.  கோவில் ஆட்சியாளர் 'ஆளுங்கணத்தார்'   என்றும்,  'அமிர்த கணத்தார்'  என்றும் பெயர் பெற்றனர்.  பெருங்கோவில்களில் ஆடல் மகளிர் இருந்து பணி செய்தனர்.  கோவில் பணிகளை குறைவற செய்ய பணி மக்கள் பலர் இருந்தனர்.

 சில கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன.  மடங்கல் துறவிகளின் ஆட்சியில் இருந்தன.  அவர்கள் மக்களுக்கு சமய போதனைகளையும் மருத்துவ வசதிகளையும் அளித்து வந்தனர்;  விழாக்காலங்களில் உணவு வழங்கினர்.  கோவில்களில் இராமாயணம்,  பரதம் போன்ற நூல்கள் படித்து பொதுமக்களுக்கு விளக்கம் பெற்றன.  கோவில்களில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நிலம் மானியமாக வழங்கப் பட்டிருந்தது.