பல்லவர் நாணயங்கள் Pallava Coins in Tamil
சங்க காலத்திற்குப் பின் தமிழகத்தை ஆண்ட புதிய மரபினர் பல்லவர்கள். சங்க இலக்கியத்தில் பல்லவர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தமிழகத்தை 600 ஆண்டுகள் ஆண்ட சிறப்புடையவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் (பல்+ ஆ) ஆடு மாடுகளை உடைய கூட்ட தலைவர்கள். இவர்கள் யார் என்பதைப் பற்றி பல கருத்துகள் நிலவுகின்றன. அவற்றில் இவர்கள் பாரசீகர், தென்னிந்திய, நாக மரபினர், வீர துர்க்க மரபினர், குரும்ப மரபினர் எனப் பலவாறு பேசப்படுகின்றனர். பல்லவர் காலத்திலே களப்பிரர் என்ற மரபினரும் ஆண்டனர். களப்பிரர் பாலி மொழி தாய்மொழியாக கொண்டவர்கள். முற்காலப் பல்லவர்கள் (கிபி 250-350) பிராகிருத மொழியையும், இடைக்காலப் பல்லவர்கள் (கிபி 350-600) வடமொழியையும், பிற்கால பல்லவர்கள் (கிபி 600-900)தமிழ் மொழியையும் தாய்மொழியாக கொண்டனர். பல்லவர் காலத்தில் கட்டிடக்கலை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. அவற்றுள் குடைவரை, கற்றளி, ஒற்றைக்கல் கோயில்கள் குறிப்பிடத்தக்கன. போர்களில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி ஏற்பட்ட போர் குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுவான கருத்தாக பல்லவர்கள் சாதவாகனரின் கீழ் ஆட்சி செய்தவர்கள். சாதவாகனர் ஆட்சி கிபி 225-ல் வீழ்ச்சியுற்றது. அவர்களுக்குப் பின்னே காஞ்சிபுரத்தில் பல்லவரை முழு ஆட்சிப் பொறுப்பும் ஏற்றுக் கொண்டனர். பல்லவர்கள் சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் பிராகிருத மொழிகள் சமஸ்கிருத மொழியிலும் பயிற்சி மிக்கவராக இருந்தனர்.
பல்லவர் கால நாணயங்கள்
பல்லவர் கால நாணயங்களில் பெரும்பாலும் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கல்வெட்டுகளில் பல்லவர் கால நாணயங்கள்
பல்லவர் கால கல்வெட்டுகளில் கானம், கழஞ்சு, காசு, பழங்காசு, மஞ்சாடி,விடேல்,விகுடு, துளைப்பொன் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. கழஞ்சு, நாணயமாக இல்லாமல் போன் கட்டியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் காணம் நாணயமாக வழங்கி இருக்கின்றது. காசு, பழங்காசு என்பவைகளும் தங்க நாணயங்கள் என்று டாக்டர் சண்முகம் கூறியுள்ளார்.
உலோகம்
பல்லவர் காலக் காசுகள் பெரும்பாலும் செம்பு, வெள்ளி, ஈயம் மற்றும் கலப்பு உலோகம்(potin) ஆகியவற்றால் செய்யப்பட்டவையே பெரும்பாலும் கிடைத்துள்ளன. இவர்கள் காலத்திய தங்க நாணயங்கள் 2 கிடைத்துள்ளதாக திருஞானசம்பந்தம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
வடிவமைப்பு
பல்லவர் காலத்தில் காசுகள் பெரும்பாலும் வட்ட வடிவத்திலேயே இருந்திருக்கின்றன. சில நாணயங்கள் சதுர வடிவில் கிடைத்துள்ளன.
நாணயங்களில் சின்னங்கள்
பெரும்பாலான பல்லவ நாணயங்கள் காளை இலச்சினை உடையவை. சில, இருப்பாய்மரங்கல் இலச்சினை உடையவை. முன்னது பல்லவரது சைவ சமயப் பற்றையும், பின்னது அவர் தம் ஆழ்கடல் வணிகத்தினையும் குறிப்பிடுகின்றன. காசின் முன்புறம் ஸ்ரீ ஸ்வஸ்திகா, விளக்கு, சங்கு, சக்கரம், வில், மீன், குடை, குடம், குதிரை, கோவில், சிங்கம், தாமரை, கதிரவன், பானை சக்கரம், தோனி, சித்திர எழுத்துக்கள், முக்குடை, வேலியினுள் மரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ சிலவோ இடம்பெறும் என அறிகிறோம்.
மகேந்திர வர்மன் காசுகல்
'கதா சித்ரா' எனும் சொற்கள் சில காசுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அவை மகேந்திர வர்மன் காலத்தவை என திரு. மீனாட்சி கூறுகின்றார்.
லக்ஷித என்று எழுதப் பெற்றுள்ள காசு முதலாம் மகேந்திரவர்மன் காலத்தை சேர்ந்தது.
இரண்டாம் நரசிம்மன் காசுகல்
நந்தி முத்திரை கொண்ட சில காசுகளில் ஸ்ரீவரன், ஸ்ரீ நந்தி, மானபர என்ற சொற்கள் காணப்படுகின்றன. இவை இரண்டாம் நரசிம்மன் காலத்தவை.
இராசசிம்மன் காசுகல்
நந்தி இலச்சினைக்கு மேல் ' மானவரா' என்னும் சொற்கள் சில காசுகளில் காணப்படுகின்றன. இதுவும் இராசசிம்மன் காசாகும்.
பரமேஸ்வரவர்மன்
பரமேஸ்வரா என்று குறிக்கப்பெற்றுள்ள காசு பரமேஸ்வரவர்மன் காலத்தையும் சார்ந்தவையாகும்.
பல்லவர் காசுகள் சைவ வைணவ மற்றும் பௌத்த அடையாளங்கள்
சில காசுகளில் ஒரு பீடத்தின் மீது சங்கு வைக்கப்பட்டுள்ளது போல் பொறிக்கப்பட்டுள்ளது. இக்காசுகள் வைணவ பற்றுடைய பல்லவர் காலத்தவை. முதலாம் நரசிம்ம வர்மனும், இரண்டாம் நந்திவர்மனும் வைணவ பற்று உடையவர்கள். ஆதலின் சங்கு பொறிக்கப்பட்ட காசுகள் இவர்களது காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். நண்டு, ஆமை, கப்பல் இவை பதிக்கப்பட்ட காசுகளும் சில கிடைக்கின்றன. அவை பல்லவரின் கடல் வணிகம் சிறப்புகளை கூறுகின்றன.
இவர்கள் காசுகளில் காணப்படும் காளை, சங்கு சக்கரம் கப்பல் உருவங்களைக் கொண்டு பல்லவர்கள் சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு மார்கங்களையும் ஒரே சமயத்தில் ஆதரித்து உள்ளார்கள் என்பதும். கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் தெளிவாகின்றது. மேலும் நண்டு சிம்மம் மீன் வில் உருவங்கள் ராசிகளை குறிப்பதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. சைத்தன்யம், வேலியினுள் மரம் போன்ற உருவங்கள் இவர்கள் பௌத்த மதத்தை ஆதரித்தனர் என்பதைக் காட்டுகின்றன.
அகழாய்வில் கிடைத்த பல்லவ நாணயங்கள்
டாக்டர் நெபுரு கராஷிமா தலைமையில் கிழக்காசிய நாடுகளில் இந்திய நாட்டின் பண்பாடு மற்றும் வர்த்தகத் தொடர்பை அறிவதற்காக தாய்லாந்து சென்ற குழுவினர் தமிழ்நாட்டைச் சார்ந்த இரு காசுகளை அங்கு கண்டறிந்தனர். அதில் சங்ககால சோழர் காசும், பல்லவர் காலத்தை சேர்ந்த காசு ஒன்றும் கிடைத்தது. இக்காசு 1.5 சென்டிமீட்டர் விட்டம் உடையது. இக்காசின் முன்புறத்தில் நிற்கும் நிலையில் உள்ள காளையின் உருவமும் பின்புறத்தில் இரு பாய் மரங்களைக் கொண்ட கப்பல் ஒன்றும் குறிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை.
அண்மைக் காலங்களில் அகழ்வாய்வின்போது எதிர்பாராத விதமாக மிகப்பழமையான பல்லவர்கால காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருபுறம் நிற்கும் நிலையில் உள்ள காளை உருவமும், மற்றொருபுறம் குடமும் வேலியினுள் மரம் மும்முடைய காசு கண்டறியப்பட்டுள்ளது. இந்த காசு ஈயத்தால் செய்யப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை 1970 க்கும் 1976க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில். காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது. பல்லவர் காலத்திய காசுகள்தயாரிக்க பயன்படும் வார்ப்பு. கருவிகள் மூன்றினை கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் தொல்லியல் துறை 1962ல் காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில். எட்டு பல்லவர் கால நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்காசுகளில் திமிலுடன் கூடிய நிற்கும் நிலையில் உள்ள காளையின் உருவமும் காளைக்கு மேல் பகுதியில் ஸ்ரீவத்ஸம் அல்லது நந்தி பாதமும் பின்புறத்தில் தாமரை மலர் அல்லது ஏதேனும் ஒரு குறியீடும் காணப்படுகின்றன. இக்காசுகளின் காலம் கிபி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத் தொல்லியல் துறை சென்னையில் உள்ள திருவான்மியூரில் பல்லவர்கால ஈயக்காசு ஒன்றை கண்டறிந்துள்ளது. இக் காசியிலும் ஒருபுறம் திமிலுடன் கூடிய நிற்கும் காளை உருவம், மறு புறம் குடம் மற்றும் வேலியினுல் மரமும் காணப்படுகின்றன. இதன் காலம் கிபி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எழுத்துக்களுடன் கூடிய வேறு சில காசுகளும் கிடைத்துள்ளன. ஒரு வகை காசில் வபு என்றும், மற்றொரு வகையில் லக்ஷித என்றும், மற்றொரு வகையில் பரமேஸ்வரா என்றும் எழுதப் பெற்றுள்ளன.
பல்லவர் நாணயங்கள் Pallava Coins Photos | |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |