பிற்கால சோழர் நாணயங்கள் Chola Coins in Tamil
பிற்காலச் சோழர் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகின்றது. அரசியலில் நிலைத்தன்மை ஏற்பட்டு, கல்வி, கலை, பண்பாடு ஆகியவை தழைத்தோங்கிய நேரம் ஆகும். ஆரம்பகால சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தமையால். பல்லவர்களது நாணயங்களைப் பயன்படுத்தினர். முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு பிறகு நாணயங்கள் தனியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்துள்ள பிற்கால சோழர் நாணயங்களில் பழமையானதாக கருதப்படுவது முதலாம் பராந்தகன் கால நாணயங்கள் தான். இக்காசு தங்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
சோழர் கால நாணயங்கள் பயன்படுத்தப்பட்ட மொழிகள்
சோழர்கால நாணயங்களில் பெரும்பாலும் தமிழ், தமிழ் கிரந்த எழுத்துக்கள் மற்றும் தேவநாகரியில் பொறிக்கப்பட்டுள்ளன.
உலோகம்
சோழர் காலத்தில் நாணயங்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களில் அச்சடிக்கப்பட்டன. ஈயத்தில் காசு அச்சடிக்கப்பட்டதாக தெரியவில்லை.
முதலாம் பராந்தகன் காசு
காசின் முன்பக்கத்தில்: நடுவில் புலியும், ஒரு மீனும் காணப்படுகின்றன. இவ்வுருவங்களை சுற்றிலும் மதுராந்தகன் என்று தமிழ் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. காசின் பின் பக்கம் முன் பக்கத்தில் உள்ளது போன்றே உள்ளது.
(இக்காசு உத்தம சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட காசாக இருக்கலாம் என்றும் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தைச் சேர்ந்த காசாக இருக்கலாம் என்று இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன)
உத்தம சோழன் காசுகள்
உத்தம சோழன் காலத்தில் இரண்டு வகை நாணயங்கள் வெளியிடப்பட்டதாக தெரிகிறது.
முதலாம் ராஜராஜன் காசுகள்
முதலாம் ராஜராஜன் காலத்தில் பனிரெண்டு வகையான காசுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. முதலாம் ராஜராஜன் காலத்தில் தான் முதன் முதலாக காசுகளில் தேவநாகரி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதுபோன்று ஒரு கயலுக்குப் பதிலாக இரு கயல்களையும் அரசு இலச்சினைகளோடு கொற்றக் குடையையும் இரு சாமரங்களையும் பொறித்ததும் இம்மன்னன் காலம் முதலே ஆகும்.சோழர்கால காசுகளில் மனித உருவம் காணப்படுவதும் இம்மன்னன் காலத்தில் இருந்து தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வுருவத்தை இலங்கை மனித உருவம் என்று காசு இயல் ஆய்வாளர்கள் கூறிவந்தனர். ஆனால் உருவத்தை பின்பு ஆட்சி புரிந்த சோழ, பாண்டிய, பிற்கால சேர, மற்றும் நாயக்க மன்னர்கள் பயன்படுத்தி இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆகையால் இந்த உருவம் பொதுவான ஒரு தெய்வ உருவமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சோழர்களின் காசுகளில் தமிழ் எழுத்தை முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் தான் காண முடிகிறது. இவன் காலத்துக்குப் பின்பு வெளியிடப்பட்டுள்ள காசுகளில் தமிழ் கிரந்த எழுத்தையும் நாகரி எழுத்தையும் தான் பயன்படுத்தியுள்ளனர்.
முதலாம் ராஜராஜன் தாம் மும்முடிச்சோழன் என பெயர் சூட்டிக் கொண்டது நினைவு கூறும் வண்ணம் சோழ நாடு சேர நாடு மற்றும் பாண்டியநாடு ஆகிய ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகை காசை அச்சடித்து புழகத்தில் கொண்டு வந்திருக்கிறான். சோழ நாட்டில் புலி உருவம் பொறித்த காசும், பாண்டிய நாட்டில் மீன் உருவம் பொறித்த காசும் சேர நாட்டில் திருவடி உருவம் பொறித்த காசும் புழகத்தில் விடப்பட்டிருக்கின்றன. சாளுக்கிய நாட்டை கைப்பற்றியதன் அடையாளமாக அந்நாட்டில் வழக்கில் இருப்பதற்காக பன்றி உருவம் பொறித்த காசை வெளியிட்டு இருக்கின்றார்.
தமிழ்நாடு தொல்லியல் துறை ராமநாதபுரம் மாவட்டம், நீராவியில் உரக என்று தேவ நாகரியில் எழுதப்பெற்றுள்ள தங்கக்காசு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. முதலாம் இராஜராஜனின் பட்டப் பெயரான(ரவி) குல மாணிக்கம் என்று எழுதப்பெற்றுள்ள வெள்ளிக்காசு ஒன்று ஆளங்குடி ஆறுமுகம் சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள. ராஜராஜன் முரளிதரன் உருவம் பொறித்த காசையும், குதிரையின் மீது ஒருவர் அமர்ந்துள்ள காசையும் வெளியிட்டுள்ளார்.
முதலாம் இராஜேந்திரன் காசுகள்
முதலாம் இராஜேந்திர சோழன் அவன் காலத்தில் ஆறு வகை காசுகளை மட்டுமே வெளியிட்டிருப்பதாக தோன்றுகின்றது. ஆந்திர மாநிலத்தில் தவளேஸ்வரத்தில் கிடைத்துள்ள காசு குவியலில் உள்ள தங்க நாணயங்களில், கங்கை கொண்ட சோழன் என்று தமிழ் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள காசுகள் முதலாம் ராஜேந்திரன் உடையது. சென்னை அருங்காட்சியகம் முடிகொண்ட சோள என்று தமிழ் கிரந்த எழுத்தில் எழுதப்பெற்றுள்ள தங்கக்காசு ஒன்றை சேகரித்துள்ளது. இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட காசுகளில் நான்கு வகை காசுகள் நாகரி எழுத்திலும் இரு வகை காசுகள் தமிழ் கிரந்த எழுத்திலும் எழுதப் பெற்றுள்ளன.
இராஜாதிராஜன் காசு
இராஜாதிராஜன் காசு என்று சொல்லும்படியாக ஒரே ஒரு தங்கக் காசு மட்டுமே இதுவரை நமக்கு கிடைத்துள்ளது.
குலோத்துங்கன் காசு
குலோத்துங்கன் காலத்தில் வெளியிடப்பட்ட மூன்று வகையான காசுகள் கிடைத்துள்ளன. இக்காசுகள் அனைத்தும் தங்க காசுகள். இது ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கவிலயதவல்லி என்ற ஊரிலிருந்து கிடைத்துள்ளது. முதல் வகை காசில் வழக்கமான அரசு சின்னம் முன்பக்கம் சுங்க என்ற தமிழ் வாசகத்தோடு 27 அல்லது 31 அல்லது 34 ஆகிய எண்கள் காணப்படுகின்றது. இது அவன் ஆட்சி புரிந்த ஆண்டுகளை குறிப்பதாக இருக்கலாம்(கிபி 1070 முதல் 1120 வரை) 50 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். இரண்டாம் வகைக் காசில் காஞ்சி என்று தமிழிலும், மூன்றாம் காசுநெ என்று தமிழில் எழுதப்பட்டுள்ளன. காஞ்சி என்பது காஞ்சிபுரத்தையும் நெ என்பது நெல்லூரின் சுருக்கமாக இருக்கலாம். இது நெல்லூரில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இது உண்மை எனில் காசுகள் அச்சடிக்கப்பட்ட இடத்தைக் தெரிவித்த முதல் மன்னன் என்ற பெருமையை முதலாம் குலோத்துங்கன் பெறுகிறார்.
பிற்கால சோழர் நாணயங்கள ் Chola Coins Photos | |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |