இராமநாதபுரம் சேதுபதி கிபி 1601 முதல் கீர்த்தி 1759 வரை : Ramanathapuram Sethupathi History in Tamil
சேதுபதி பதவி உருவாக்கம்
இராமநாதபுரம் மறவர்கள் வாழும் இடமாக இருந்தது. ஆனால் அவர்களிடம் ஒரு அரசை உருவாக்கியது மதுரை முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார். (கிபி 1601 முதல் 1609 வரை) மதுரை முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், கள்ளர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அந்த தொல்லைகளை அடக்க, முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் ' சடையக்கத் தேவர்' என்பவரை மறவர் பகுதியின் தலைவராக நியமித்தார். அவர் ' சேதுபதி' என்று அழைக்கப்பட்டார். இவர் இப்பகுதியில் நடந்த திருட்டுக்களை முறியடித்தார். இவர் கிபி 1623 இறந்தார். அவருக்குப்பின் அவர் மகன் ' கூத்தன்' சேதுபதி ஆனார். இவர் கிபி 1635 வரை வாழ்ந்தார். அவருக்குப் பிறகு ' இரண்டாம் சடையக்கத் தேவர்' சேதுபதி பதவிக்கு வந்தார். அவருக்கு வார்த்தைகள் இல்லை. எனவே, அவர் தன்னுடைய தங்கை மகன், ' ரகுநாதனை' சேதுபதி ஆக்கவேண்டும் என்று அறிவித்தார்.
தம்பியும் திருமலை நாயக்கரும்
ஆனால் தம்பி என்பவர், சேதுபதி பதவிக்குப் போட்டியிட்டார். அவர் மதுரையை ஆண்டு வந்த திருமலை நாயக்கரிடம் முறையிட்டார். திருமலை நாயக்கரும், தன்னுடைய தளவாய் இராம பையனையும், அரங்கநாத நாயக்கரையும், இராமநாதபுரம் மீது படையெடுக்க உத்தரவிட்டார். மேலும் சேதுபதி, மதுரை நாயக்கருக்குக் கட்டவேண்டிய திறை பாக்கி இருந்தது. எனவே திருமலை நாயக்கர் சேதுபதி மீது படையெடுத்தார். இராமப்பையன், மிகவும் கடுமையாகப் போரிட்டார். இந்த யுத்தத்தில் போர்த்துகீசியர்கள் சேதுபதிக்கு உதவி புரிந்தனர். போரின் முடிவில் திருமலை நாயக்கர் படைகள் வென்றன. திருமலை நாயக்கர் தம்பியை சேதுபதி ஆக்கினார். ஆனால் தம்பியின் சேதுபதி ஆட்சியில், ஏற்பட்ட குழப்பங்கள் நிலவின. திருமலை நாயக்கரும், தம்பிக்கு மக்களின் ஆதரவு இல்லை என்ற உண்மை நிலையை அறிந்து கொண்டு, சடையக்கத் தேவரைப் விடுதலை செய்தார். ஆனால் சடையக்கத் தேவர், தம்பியால் கொலை செய்யப்பட்டார். இதன்பின் திருமலை நாயக்கர், நீதிபதிகள் இடையே அரசுரிமைப் போட்டி ஏற்படுவதை தடுக்க, சேதுபதி ராஜ்யத்தை மூன்றாகப் பிரித்தார். இராமநாதபுரம் என்ற பகுதியில் ரகுநாத தேவருக்கும், சிவகங்கை பகுதியில் தம்பிக்கும், திருவாடனை தனக்கத் தேவருக்கும் கொடுத்தார். ஆனால், இரகுநாத தேவர் தவிர மற்றவர்கள் சீக்கிரமே இறந்து விட்டதால், இராமநாதபுரம் சேதுபதி மீண்டும் ஒன்றாகியது.
இரகுநாத சேதுபதி I
திருமலை நாயக்கர் காலத்தில் எட்டயபுரம் பாளையக்காரர்கள் அவர் எதிர்த்தனர். இதில் இராமநாதபுரம் இரகுநாத சேதுபதி, திருமலை நாயக்கருக்கு உதவி செய்து, எட்டயபுர பாளையக்காரர்களை தோற்கடித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர், ரகுநாத தேவருக்கு வரிச் சலுகை அளித்தார். மேலும் மூன்றில் ஒரு பகுதி, முத்து எடுக்கும் தொழிலில் பங்குபெற உரிமையை அளித்தார். இதுமட்டுமன்றி அவருக்கு ' நாட்டு காவலர்' என்ற ஒரு பட்டம் அளித்தார். இவர், திருமலை நாயக்கருக்கு, மைசூர் படைகளால் மோசமான தோல்வி ஏற்பட்டபோது, அவருக்கு உதவி செய்து காப்பாற்றினார்.
இவருடைய காலத்தில், அங்கிருந்த வணிகர்கள் ' பருத்தி நூல்' வியாபாரத்தில் சோழமண்டலக் கடற்கரை நெசவாளிகளுடன் சேர்ந்து கொண்டு, கேரளா துறைமுகம் வழியாக இலங்கை வரை வாணிகம் செய்தனர். முஸ்லிம் மரக்காயர்கள், சேதுபதி அரசுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். எனவே சேதுபதிகள், முஸ்லிம்களுக்கு ஆதரவாக, டச்சுக்காரர்களை எதிர்த்துப் போரிட்டனர்.
சேதுபதி தனி ராஜ்ஜியம்
சேதுபதிகள், மதுரை நாயக்கருக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆனாலும், அவர்கள் சுதந்திரமாகவே செயல்பட்டவர்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தன. இராமநாதபுரம் கடற்கரையில் வெளிநாடுகளுடன் வணிகம் செய்யும் ' நாட்டுக்கோட்டை செட்டியார்கள்' பலர் இருந்தனர். அவர்களுடைய அதிகம் பரவ பரவ அவர்களின் நலன்களை கவனிக்க சேதுபதிகள் சுயேச்சையாக செயற்பட வேண்டியதாயிற்று. மேலும் நாயக்க மன்னர்களும், தஞ்சாவூர் மன்னர்களும் வணிகத்தை கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபட்டதால், சேதுபதிகள் சுதந்திரமான முடிவுகளை எடுக்க வேண்டி நேரிட்டது.
திருமலை சேதுபதி கிபி 1659 முதல் கிபி 1674 வரை
திருமலை சேதுபதி, மதுரை சொக்கநாத நாயக்கர் காலத்தில், இராமநாதபுரத்தில் சேதுபதி அரசராக இருந்தார். சொக்கநாத நாயக்கர் இராமநாதபுரம் மீது படையெடுத்தார். திருமலை திருப்பதி, அவருடைய பல கோட்டைகளான புதுக்கோட்டை, மானாமதுரை ஆகியவைகளை இழந்தாலும், தொடர்ந்து போரிட்டனர். ஆனால் சொக்கநாத நாயக்கருக்கு சில மதச்சடங்குகளை செய்ய வேண்டி இருந்ததால், அவர் உடனடியாக மதுரை திரும்பினார். எனவே மதுரை நாயக்க வீரர்கள் வெறும் கையுடன் திரும்பினர். கடைசிவரை, சொக்கநாத நாயக்கர் திருமலை சேதுபதி தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் திருமலை சேதுபதி கிபி 1674 இறந்துபோனார்.
இரகுநாத சேதுபதி II(கிழவன் சேதுபதி) கிபி 1674 முதல் கிபி 1710 வரை
இரண்டாம் இரகுநாதன் சேதுபதி என்று அழைக்கப்படும் ' கிழவன் சேதுபதி' பதவி ஏற்றார். அவர் புதுக்கோட்டை அரசருடன் போரிட்டு, அவரை பதவியில் இருந்து இறக்கினார். மேலும் இரகுநாதன் தேவரை புதுக்கோட்டை மன்னராக்கினார். மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் கிபி 1682 - 1689) காலத்தில் கிழவன் சேதுபதி, மதுரை நாயக்கரை எதிர்த்து புரட்சி செய்தார். கிழவன் சேதுபதி மதுரை அரசுக்கு எதிராகப் போரிட்டார். அவர் தஞ்சை மராத்திய மன்னர் ஏகோஜியுடன் சேர்ந்து கொண்டு மதுரைக்கு சென்று ட செங்கமலதாசை' மன்னனாக்க போரிட்டார் கிபி 1700ல், மதுரை இராணி மங்கம்மாளுடன், மராத்திய ஷாஜி ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு, இரண்டு படைகளும் தளவாய் குணமாக இராமநாதபுரத்தின் மீது படையெடுத்தனர். ஆனால் கிழவன் சேதுபதி இரண்டு படைகளையும் சந்திப்பு சமாளித்தார்.
கிழவன் சேதுபதியும் இராணி மங்கம்மாளும்
கிழவன் சேதுபதி இராணி மங்கம்மாள் ஆட்சியின்போது 'இராமநாதபுரம் சேது நாட்டை' ஒரு தனி சுதந்திர நாடாகவே ஆட்சி செய்தார். மேலும் மதுரையை கிபி 1698ல் கைப்பற்றி, மதுரையையும் சில காலம் ஆட்சி செய்தார். ஆனால் தளவாய் நரசப்பய்யா, மதுரைக்குச் சென்று, சேதுபதியைத் தோற்கடித்தார். ஆகையால் இராணிமங்கம்மாள் சுதந்திரமான கிழவன் சேதுபதி ஆட்சியை அடக்க நினைத்தார். தளபதி நரப்பய்யாவை, இராமநாதபுரம் அனுப்பினார். ஆனால் அவர் தோற்கடிக்கப்பட்டார். ஆகவே கிழவன் சேதுபதி கிபி 1702ல் முழுச் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினார். தஞ்சாவூர் மராத்திய அரசர் ஷஜியும், கிழவன் சேதுபதி கிபி 1704ல் படை எடுக்க முயற்சித்தார். ஆனால் அவரும் தோல்வியுற்றார்.
விஜய இரகுநாத தேவர்
மதுரை விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில். நீண்ட காலம் ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதி இறந்து போனார். எனவே அவர், தன்னுடைய சேதுபதி உரிமையை சட்டபூர்வ மில்லாத மகன் பவானி சங்கருக்கு அளித்தார். ஆனால் கிழவன் சேதுபதியுடன் (சட்டபூர்வ) முறைப்படி மகன் வடுகநாத தேவரும், விஜய ரகுநாத தேவரும் இருந்தனர். அவர்களில் விஜயரகுநாத தேவர் சேதுபதி பட்டம் பெற்று(கிபி 1710 முதல் கிபி 1725 வரை) அறந்தாங்கியில் இருந்து ஆட்சி செய்தார். இவர் சிறந்த சிவபக்தராகவும், கோவில் பணிகள் செய்பவராகவும் இருந்தார்.
மேலும் இவர் தமிழ் புலவர்களை ஆதரித்தார். இவர், இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி, தன்னுடைய ராஜ்யத்திலே வாழுகின்ற பல சாதி மக்கள் பணம் கட்டும்படியும், நெல் அளிக்கும்படியும் உத்தரவு போட்டார். இவருக்கும் பவானி சங்கருக்கும் இடையில் நடந்த வாரிசு உரிமைப் போரில் இராமநாதபுரம் தன் மதிப்பை இழந்தது. இவர் தன்னுடைய ஆட்சியின்போது, இராமநாதபுரம் சேதுபதி நாட்டை, 8 வருவாய் பகுதிகளாகவும், 72 ராணுவ பிரிவுகளாகவும் பிரித்தார். பிறகு அவைகளுக்கு ட நாட்டுத் தலைவர்களையும்ட, பாளையக்காரர்களையும், ஊரக பணியாளர்களையும் நியமித்தார். இவரை எதிர்த்து பவானி சங்கர் என்பவர் சேதுபதி பதவிக்கு போட்டியிட்டதால், இராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை என்றும் இராமநாதபுரம் என்றும் இரண்டாகப் பிரிந்தது.
விஜய ரகுநாத சேதுபதி, கீழக்கரையை சேர்ந்த ' சீதக்காதி வள்ளலுடன்' தொடர்பு வைத்திருந்தார். அவரின் ஆலோசனைப்படி, மண் கோட்டையாக இருந்த ராமநாதபுரம் கோட்டையை, கல் கோட்டையாகக் கட்டினார். மேலும் இராமலிங்க விலாசம் என்ற புதிய மாளிகையையும் கோட்டையில் கட்டினார்.
முகலாயப் பாணியில், சேதுபதியின் நிர்வாகம் மாறியது. அரசருக்கு மெய்க்காப்பாளராக அபீசீனிய நாட்டு போர் வீரர்கள் இடம்பெற்றனர். சேதுபதி மன்னரது மரக்கலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக நியமிக்கப்பட்டனர். இவளது ஆலோசனையின்படி, மதுரைச் சிமையிலிருந்து பிள்ளைமார்களும், முதலிகளும் வரவழைக்கப்பட்டு. பிரதான தளகர்த்தர்களாக நியமிக்கப்பட்டனர். சேதுபதி நாட்டில், முஸ்லிம்களுக்கு அதிக மரியாதையும் இருந்தது. சேதுபதிகள் ஓட்டிய கப்பல்களில் தண்டூல், ரகுதா போன்ற இஸ்லாமிய அலுவலர்கள் பணிபுரிந்தனர்.
சேதுபதி மன்னர்கள், இராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடிப் பகுதி வரையான தங்களது கடற்கரையை கண்காணிப்பையும் அங்குள்ள மக்களிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையையும், சீதக்காதி மரைக்காயருக்கு வழங்கினார்.
சேதுபதி மன்னர் எட்டு நாட்களுக்குள் 30000 அல்ல 40000 படைவீரர்களை விரட்டியதால், சேதுபதி அரசை கண்டு நாயக்கர், நவாபு மராத்திய மன்னர்கள் பயந்தனர்.
இவர்களின் வழிவந்த கடைசி சேதுபதி 'முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி' யாவார். இவரை கிழக்கிந்திய கம்பெனி, கிபி 1759 இல் கைது செய்து சிறையில் இட்டனர். சேதுபதி நிர்வாகத்தை பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக்கொண்டது.