களப்பிரர் காலம் கிபி 250- கிபி 550 : Kalapirar Kalam in Tamil

களப்பிரர் யார்,  எங்கிருந்து வந்தார்கள்,  எப்போது தமிழகத்தில் நுழைந்தார்கள்  எனினும் ஆய்வு இன்னும் முடிந்த பாடில்லை. களப்பிரர்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. சான்றுகளும் களப்பிரர்கள் பற்றி மறைமுகமாகவே குறிப்பிடுகின்றன. களப்பிரர்களை களவர் என்றும், கள்வர் என்றும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  தமிழகத்தின் வட எல்லையான வேங்கடத்துக்கும்  மேற்கில் வாழ்ந்தவர்கள் என ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.  களப்பிரர்கள் ஆந்திரங்களால் விரட்டப்பட்டு தெற்கு நோக்கி குடிபெயர்ந்தார்கள்.  தமிழகம் முழுவதிலும் இவர்கள் பரவினார்கள்,  தொண்டை மண்டலம்,  சோழமண்டலம்,  பாண்டி மண்டலம்  ஆகியவைகள் அனைத்தும் இவர்களது கொடுமையில் இருந்து தப்பவில்லை. தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவில்லாதவை.  இவர்கள் கொடுங்கோலர்கள்,  கலி அரசர்கள்,  இவர்களைப் பற்றி சில குறிப்புகள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும் பல்லவர்கள்,  சாளுக்கியர்கள் ஆகியவர்களுடைய செப்பேடுகளிலும் கிடைக்கின்றன.  கொடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஒருவனாலும், சிம்மவிஷ்ணு, முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னனாலும்,  முதலாம் விக்ரமாதித்தன், இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சளுக்க மன்னனாலும் களப்பிரர்கள் அழிவுற்றனா் என அறிகிறோம். மதுரையை சிறிது காலம் ஆண்டுவந்த கருநாடரே களப்பிரர்கள் என்றும்  ஒரு கருத்து  நிலவுகின்றது.  

களப்பிரர்கள்

இக்களப்பிரர் யாவர்?  அவர்கள் எப்படி தமிழகத்துக்கு வந்தார்கள்?  அவர்கள் தமிழகத்தை எம்முறையில் ஆண்டனர் போன்றவை இன்னும்  தெளிவாக  புதிராகவே உள்ளன. 

களப்பிரர் பற்றி அறிய உதவுவன

இலக்கியச் சான்றுகள்

இடைக்கால இலக்கியங்கள்  சிலவற்றில் களப்பிரர் பற்றிய குறிப்புகளை காணலாம்.   சேர, சோழ, பாண்டிய  மன்னர்கள் பாடியதாக நான்கு  செய்யுட்கள்  தமிழ் நாவலர் சரிதையில்  உள்ளன.  இப்பாடல்கள் மூவேந்தர்களை போரில் வென்று சிறைப்படுத்திய களப்பிரர்களை புகழ்ந்து  மூவேந்தர்களும் பாடிய  முறையில் அமைந்துள்ளன.  இதைப்பற்றிய சுவையான செய்தி ஒன்றும் வழங்கப்படுகிறது.   சேர, சோழர்கள்  களப்பிரர்களை புகழ்ந்து பாட,  பாண்டியன் மருத்து களப்பிரரை இகழ்ந்து பாடியதாகவும், களப்பிர அரசன்  சினந்து பாண்டியன் காலில் மற்றுமொரு தளையிட,  பாண்டியன் அவனைப் புகழ்ந்து பாடியதாகவும் கூறப்படுகிறது.
 யாப்பருங்கலம் என்ற நூல் அச்சுத களப்பாளன் என்ற களப்பிரரை பற்றி கூறும்.  இவன் நந்தி மலையே ஆண்டவன்.  கல்வியில் சிறந்த அந்தணர்களை கருத்துடன் பாதுகாத்தான் என்று  இந்நூல் கூறும்.

பெரியபுராணத்தில் சேக்கிழார்  கூற்றுவ நாயனார் என்ற களப்பிர மன்னனைப்  பற்றி குறிப்பிடுகிறார்.  இவன் சிறந்த சிவ பக்தன்,  இவன் சோழநாட்டை  வென்றான்.  தில்லை வாழ் அந்தணர்கள் தனக்கு  முடிசூட்ட வேண்டும் என்று விரும்பினான்.  ஆனால் அவர்கள்  மறுக்கவே   சிவபெருமானே தில்லைவாழ் அந்தணர்களை இவனுக்கு  முடி  சூட்டுவதற்கு  சம்மதிக்க வைத்ததாக பெரிய புராணம் கூறும்.

கல்வெட்டு சான்றுகள்

களப்பிரர்கள் பற்றிக்  சான்றுகளுள்  பாண்டியர்களால் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் முக்கியமானதாகும்.  பல்யாகசாலை முதுகுடுமிப்  பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர் பாண்டிய நாட்டை களப்பிரர் கைப்பற்றியதை இச்செப்பேட்டால்  அறியலாம்.  பாண்டியன் நெடுஞ்சடையன் ஆர் வெளியிடப்பட்ட இவ் வேள்விக்குடிச் செப்பேடுகள் கிபி நூறாமாண்டில் பாண்டிய நாட்டை ஆண்ட கடுங்கோன் களப்பிரர் என்ற செய்திகளை கூறுகின்றன.  தளவாய்புரம் செப்பேடுகள் இச்செய்தியை உறுதிப்படுத்துகின்றன.  கொற்றமங்கலம்  செப்பேடுகள் பல்லவ மன்னன் தந்திவர்மன் களப்பிரர்களைப்  பகைவர்களாக கருதினான் என்கிறது.  முதலாம் நரசிம்மவர்மன் கூரம் செப்பேடு அவன் தோழர்,  கேரளர்,  களப்பிரர்,  பாண்டியர் அனைவரையும் வென்றதை குறிக்கின்றது.  இரண்டாம் சாளுக்கியர் விக்கிரமாதித்தனின் நேருர்   நன்கொடை பட்டயம்  இச்செய்தியைக் உறுதிப்படுத்தும்.    விநயாதித்தனின்    ஹரிஹர்  நன்கொடை  பட்டயம்  அவன் பல்லவர்,  தேரர்,  களப்பிரரை தோற்கடித்தான் என்று கூறுகின்றது.

 திருப்புகலூர் கல்வெட்டு நெற்குன்றம் சிழார் என்ற  களப்பிர அரசனைக்   குறிப்பிடுகின்றது.  வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டு இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னனை அவனது முடிசூட்டுவிழாவின் போது முத்திரையர் எதிர்கொண்டு அழைத்தனர் என்று கூறுகின்றது.  இம்முத்திரையரே  களப்பிரர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.  செந்தலை தூண்  தூண் கல்வெட்டு ' கள்வர் கள்வன்'  என்று தன்னை கூறிக்கொண்ட பெரும்பிடுகு  முத்திரையனைப்  பற்றி குறிப்பிடுகின்றது.

 களப்பிரர் காலம்

மூன்றாம் நூற்றாண்டின்  இடைப் பகுதியில் இருந்து ஆறாம் நூற்றாண்டின்  இறுதிவரை தமிழக வரலாற்றை பற்றி தெளிவாக அறிய இயலவில்லை.  இம்மூன்று நூற்றாண்டு காலமும் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.  வேள்விக்குடி பட்டயம் சில செய்திகளை தருகின்றது.  முதுகுடுமிப் பெருவழுதி என்ற சங்ககாலப் பாண்டிய மன்னன் ஒரு சிற்றுரை சில அந்தணர்களுக்கு தானமாக வழங்கினார்.  ஆனால் களப்பிரர்கள்  மதுரையை கைப்பற்றியபோது  பாண்டியரால் தானமாக வழங்கப்பட்ட கிராமத்தை மீண்டும் கைக் கொண்டார்.  கிபி 767இல்  பராந்தக  நெடுஞ்சடையன் என்ற பாண்டியன் ஆட்சிக்கு வந்தபோது இக்கிராமத்தை மீண்டும்  அவ்வந்தணர்களின்  பரம்பரையினருக்கு உரிமை ஆக்கினான்.  இச்செய்திகளை விளக்க எழுந்ததுதான்  வேள்விக்குடி பட்டயம் ஆகும்.  இப்பராந்தக  நெடுஞ்சடையன்,  களப்பிரர்களை வென்று  பாண்டியர் ஆட்சியை நிறுவிய பாண்டியன் கடுங்கோனைப்   புகழ்ந்துள்ளார்.  பாண்டியர்களின் காலத்தை வைத்துக்  கணக்கிட்டால் களப்பிரர் தமிழகத்தை ஆண்ட காலம் கிபி 250 க்கும் கிபி 600 க்கும் இடைப்பட்ட காலம் எனலாம்.

 களப்பிரர் பற்றிய கருத்துக்கள்

து.அ.  கோபிநாத்ராவ்  களப்பிரர்களின் முத்திரையர் என்று கருதுவர்.  காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில் கல்வெட்டு செய்தியை இதற்கு அடிப்படையாக கொள்கிறார்.  இக்கல்வெட்டு சுவரன் மாறன் அல்லது இரண்டாம் பெரும்பிடுகு என்னும் முத்தரையச் சிற்றரசன்,  நந்திவர்ம பல்லவ  மல்லனை வரவேற்ற  செய்தியைக் கூறும்.  சுவரன் மாறன்  கல்வர் கள்வன்  என்று வழங்கப்படுகின்றன.  தமிழில் இன்று வழங்கும்   சொல்லே  வடமொழியில்  களப்பிரர் என்றாயிற்று   என்பர் ந. சுப்ரமணியன்.  இம் முத்திரையர்களை   வென்றது தான் பாண்டியன் கடுங்கோன்  கிபி 600 இல்   ஆட்சியை  நிறுவினான்  என்பர்.  களப்பிரர்களே முத்திரையர் என்ற  கோபிநாதராவ் கூற்றுக்கு இதுவும் சான்றாக அமையும்.

 களப்பிரரும் முத்திரையையும் ஒருவரே என்பது மு.  இராகவ  ஐயங்காருக்கு உடன்பாடான கருத்து அல்ல. " வேளாளர் களப்பாளர் என்பவர்களே  பின்னர்  களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர்;  அவர்கள் முத்திரையர் அல்லர்"  என்கிறார் இராகவ ஐயங்கார் சைவ சித்தாந்தத்தில் வல்லவரான மெய்கண்டாரின் தந்தையாரான அச்சுத களப்பாளரும்  வேளாளரே என்கிறார் இவர்.  களப்பிரர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களே புறந்தார்  அல்ல  என்றும் இவர் கருதுவர்.  இதற்குச் சான்றாக யாப்பருங்காலத்தை காட்டுகிறார்.   இந்நூல் அச்சுதவிக்கந்தன்  என்ற களப்பிர மன்னன் அந்தணர்களை ஆதரித்தமை கூறும்.

 யாப்பருங்கலம் களப்பிரர் நந்தி மலையைச்  சார்ந்தவர்கள் என்று  கூறுவதாலும்,  இந்த நந்தி மலை தமிழகத்திற்கு வடபால் உள்ள கர்நாடகத்தில் உள்ள மலையென்பதாலும்   களப்பிரர் தமிழரல்லர் என்பர் எஸ்.  கிருஷ்ணசாமி அய்யங்கார்.

  களப்பிரரை  வேங்கட  மலைக்கு அருகில் வாழ்ந்த  கள்வரோடு  இணைத்து கூறுகிறார்.  எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்.  வேங்கடத்தின்  தலைவனான புல்லி என்ற   கள்வன் பற்றிச்  சங்க இலக்கியங்கள் கூறுவதை சான்றாகக்  காட்டுகிறார்.  இவர்கள் ' கள்வன்'  என்று குறிப்பிடப்படாமல் ' களவர்'  என்று குறிப்பிட்டுள்ளனர்.  தக்காணத்தின்  கீழைப்  பகுதியை ஆண்ட பல்லவர்கள் தெற்கு நோக்கி காஞ்சிபுரம்  வரை வந்துவிடவே,   காஞ்சியில் இருந்த கள்வர் அங்கிருந்து தெற்கு நோக்கி சென்று மூவேந்தர்களுடன் போரிட்டு வென்று தமிழகத்தில் தம் ஆட்சியை நிறுவினர்.  தஞ்சையை   அடைந்த  களப்பிரர் தங்கள் குழுக்களை பல்வேறு இடங்களில் தங்க வைத்தனர்.  முத்திரையர் என்பார் அப்பிரிவுகளுள்  ஒரு சாரார் எனவும்,  அச்சுத  விக்கந்தன்  அவர்களுள் ஒருவன் எனவும் எஸ் கே ஐயங்கார் கருதுகிறார்.  ந.  சுப்பிரமணியம் அய்யங்காருடன் உடன்படுகிறார்.

தமிழ் நாவலர் சரிதை அச்சுதக் களப்பாளன்  மூவேந்தர்களையும் வென்று  சிரையில் இட்டதை கூறும்.   இந்த அச்சுதக் களப்பாளன்  ஒரு களப்பிர மன்னனே  என்பர் மா.  இராசமாணிக்கனார்.  அச்சுத களப்பாளன்  சிறந்த  சைவன் எனவும்,  நந்தினியின் பெயரை புனித பெயராக கொண்டான்  எனவும் வேள்விகள் செய்த அந்தணர்களை ஆதரித்தான் எனவும் தமிழ் நாவலர் சரிதை கூறும்.   ஆனால் களப்பிரர்கள் பொதுவாக சமணர்களாகவும்    பௌத்தர்களாகவோ   இருப்பதுதான் வழக்கம்.  எனவே ' களப்பாளர்களைக்  களப்பிரர்களாக  எண்ணுதல் பொருந்தாது'  என்பர் கிருஷ்ணசாமி ஐயங்கார்.

 கே. ஆர்.  வெங்கடராம  ஐயர் கருத்துப்படி களப்பிரர்,  தமிழகத்தின் மீது படையெடுத்தது ஏறத்தாள கிபி ஐந்தாம் நூற்றாண்டின்  தொடக்கம் என்பர்.  இவர் கருத்துப்படி களப்பிரர் பெங்களூர்,  சித்தூர்  பகுதிகளில் கடம்பர்களால்  துரத்தப்பட்டு கிழக்கே தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தனர். 'கலியரசர்  பற்றிச்  சாதனங்கள் கூறுவதால் கலியுகம்,   கலிகுளம்  என்பன கலப்பிரரோடு  தொடர்புடையன  என்கின்றார்.  ஐயா அவர்கள் களப்பிரர்  ஆட்சி காலத்தைக்  கிபி ஐந்தாம் நூற்றாண்டு என்கிறார்.  ந.  சுப்பிரமணியன் களப்பிரர் கிபி மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்  என்பார்.

 சதாசிவ பண்டாரத்தார்  கருத்துப்படி களப்பிரர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த நாடோடி   கூட்டத்தவர்.   களப்பாளர்களே  களப்பிரர் என்ற கருத்தை  இவர் மறுக்கிறார்.  பண்டாரத்தார் கருத்துப்படி களப்பாளர்கள் தமிழர்;  கும்பகோணம்  அருகிலுள்ள தஞ்சையைச் சார்ந்த  களப்பாழ் என்ற  இடத்திலிருந்து வந்தவர்களே  களப்பாளர் என்கிறார்.  தமிழகத்தைச் சார்ந்த   வேளிர்  அல்லது வேளாளர்களின் ஒரு பிரிவினரே இக்களப்பாளர் என்கின்றார்.  பெரியபுராணத்தில் குறிக்கப்படும் கூற்றுவ நாயனார்   களப்பாளனே  தவிர களப்பிரர் அல்ல என்பது இவர் கருத்து.  தில்லை வாழ் அந்தணர்கள் தம் பொறுப்பிலிருந்த சோழநாட்டு  மணிமுடியை கூற்றுவ நாயனாருக்குச்  சூட்ட மறுத்தனர்.  சிற்றரசர்களான   வேளிர்  குடியை சார்ந்தவராக கூற்றுவ நாயனார் இருந்ததே  இதற்கு காரணம் என்கிறார் பண்டாரத்தார்.
 தொண்டை மண்டலத்தைச் சார்ந்த  ஒழியாரைக்  களப்பிரர் என்கிறார் டிவி மகாலிங்கம்.  இக்கருத்தை நா சுப்பிரமணியன் மறுக்கிறார்.  தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியைச் சார்ந்த  ஒழி நாடே ஓழியர்க்குறியது என்று  தொல்காப்பியம்  கூறுகிறது.   வேங்கடபகுதியிலிருந்து வந்த  களப்பிரர்க்கும்   ஒழியர்க்கும்  எத்தொடர்பும் கிடையாது  என்கிறார் ந. சுப்ரமணியன்.

 தி. ந.  சுப்பிரமணியன் தமிழகத்தை வென்று பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும்  தங்கிய  களப்பிரரை   சமணர் என்கிறார்.  தமிழில் அற நூல்கள் பலவற்றை இயற்றிய சமணர்கள்  களப்பிரர் குலத்தவரே என்று கருதுகிறார்.

 அவர் ஏறத்தாழ  கிபி 470இல்  மதுரையில் திராவிட சங்கம் நிறுவிய வஜ்ர நந்திக்கும் களப்பிரருக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்திக் கூறுவர்.

 எம். எஸ.  கோவிந்தசாமி,  மயிலை சீனி  வேங்கடசாமி  போன்றோர் முத்திரையர் களப்பிரர்களின் ஒரு பிரிவினரே என்பர்.  காலப்போக்கில் அவர்கள் தமிழராக மாறிவிட்டதாகவும் பல  தமிழ் அறிஞர்களை ஆதரித்ததாகவும் கருதுகின்றனர்.  இவர்கள் சமணர்களை ஆதரித்ததை இவர்கள் கட்டியுள்ள சமணப்பள்ளிகள் உணர்த்துகின்றன.   பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்த காரணத்தினால் மாறன் என்ற பட்டப்பெயரை தங்கள் இயற்பெயருடன் இணைந்திருந்தனர்.  பிற்காலச் சோழப் பேரரசை  விசயாலயன்  நிறுவுவதற்கு முன்,  பாண்டியர்கள் ஆட்சிகுட்பட்ட  சோணாட்டுப் பகுதியில்  இவர்கள் வாழ்ந்தனர் என்று கோவிந்தசாமியின் வெங்கடசாமியும்  கருதுவர்.

 தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியின் விளைவு

300 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட களப்பிரர்கள் தமிழரின் வாழ்விலும் பண்பாட்டிலும் மிகப்பெரும் மாறுதல் ஏற்பட வலி செய்துவிட்டனர்.  இவர்கள் வரவா தமிழர் வாழ்வின் அடிப்படை நோக்கங்கள் கூட ஆட்டம் கண்டன;  சங்ககால பண்பாட்டிற்கும் களப்பிரர் கால பண்பாட்டிற்கும்  இடையில் மிகுந்த வேறுபாடு உள்ளது. ' உலகியல்  கண் படைத்த,  சமய பொறை மிகுந்த,  வாணிப திறமை  சார்ந்த சங்க காலத்திற்கும் வறுமையைப் பற்றிய கவலை நிறைந்த சமயப் பூசல் மிகுந்த  கோயில்கள் நிர்ணயிப்பதிலும் அங்கு  கடவுளரை நிறுவி அவரை வழிபடுவதிலும் ஈடுபாடு  மிகுந்த பிற்காலத்தவர்களுக்கும் இடையே நின்ற வேறுபாடு சாதாரணமானதன்று'  என்று கூறினார் ந சுப்ரமணியன்.